‘சுமார் 60 கிமீ வேகத்தில் பறந்த கார்’.. ‘அசந்து தூங்கிய டிரைவர்’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்வேகமாக சென்றுகொண்டிருந்த காரில் டிரைவர் தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் தானியங்கி காரான டெஸ்லாவில் இருவர் பயணம் செய்துள்ளனர். அப்போது காரின் டிரைவரும், பயணம் செய்தவரும் அயர்ந்து தூங்கியுள்ளனர். சுமார் 60 கிமீ வேகத்தில் செல்லும் காரில் டிரைவர் தூங்கியவாறு சென்றதைப் பார்த்த ஒருவர் தனது காரில் இருந்து ஒலி எழுப்பி அவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனாலும் அவர்கள் எழுந்தபாடில்லை. இதனை அவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெஸ்லா நிறுவனம், டெஸ்லா கார் தானாகவே இயங்கும் திறன் கொண்டதுதான். ஆனாலும் டிரைவர்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். தானியங்கி என நினைத்து அசந்து தூங்கும் அளவுக்கு காரை பாதுகாப்பாக நினைக்க கூடாது. டிரைவரின் செயல்பாடு நீண்ட நேரம் அமைதியாக இருந்தால் காரில் இருந்து வரும் எச்சரிக்கை மணி அவரை விழிப்படைய செய்யும் என தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Statement from @Tesla :. pic.twitter.com/bw2qhl4YzY
— Dakota Randall (@DakRandall) September 10, 2019