'இடைவேளையில் கழிவறைக்குச் சென்ற சில நொடிகளில்'... 'அலறி ஓடிய' மாணவ, மாணவிகள்.. 16 பேர் 'மருத்துவமனையில்' அனுமதி!.. 1200 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மன் பள்ளி ஒன்றின் கழிவறைக்கு செல்வதற்காக இடைவேளை அறிவிக்கப்பட்டபோது அங்கு சென்ற மாணவ மாணவிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்துள்ளனர்.
இதற்கு காரணம் ஒரு குளவிக்கூடுதான். ஆம் எப்படியோ கலைந்து விட்ட அந்த குளவிக் கூட்டில் இருந்து வெளியான குளவிகள் மாணவ மாணவிகளை விரட்டி விரட்டி கொட்ட முயற்சித்ததில் 16 மாணவ மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேற்கு ஜெர்மனியில் உள்ள Lüdenscheid என்கிற நகரில் இருக்கும் பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியின் விளையாட்டு மைதானம் மூடப்பட்டது. பள்ளியில் பயிலும் 1,200 மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால் ஜெர்மனியில் குளவிகளைக் கொல்வர்களுக்கு 5,000 யூரோக்கள் முதல் 50 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் ஜெர்மனியில் குளவிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதுதான். எனினும் குளவிகள் கொட்டுவதால் யாருக்காவது ஒவ்வாமை ஏற்பட்டால் அவர்கள் குளவிகளை கொல்ல அனுமதி உண்டு என்று என்பதும் குறிப்பிடத்தக்கது
மற்ற செய்திகள்