FB-ல ஒரே ஒரு போஸ்ட் தான்.. காசு நிக்காம வந்துட்டே இருக்கு.. பெண் ஊழியருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வாடிக்கையாளர் பதிவிட்ட ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் பெண் ஊழியருக்கு 7 லட்ச ரூபாய் வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் IHOP என்ற உணவகம் இயங்கி வருகிறது. இதில் ஜாஸ்மின் காஸ்டிலோ என்ற பெண் சப்ளையராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு ரீட்டா ரோஸ் என்ற வாடிக்கையாளருக்கு உணவு பரிமாறி உள்ளார். அப்போது அவர் ஜாஸ்மினுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார். மேலும் ஜாஸ்மினின் குடும்ப சூழல் குறித்தும் விசாரித்துள்ளார். இதனை அடுத்து பேஸ்புக்கில் ஜாஸ்மின் குறித்து ரீட்டா ரோஸ் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், ‘நானும் எனது அம்மாவும் IHOP என்ற உணவகம் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு உணவு பரிமாறிய ஜாஸ்மின் என்ற ஊழியர் மிகவும் சிறப்பாகவும், கனிவாகவும் எங்களை நடத்தினார். அதே நேரத்தில் அவர் தொழில்முறை நேர்த்தியிலிருந்தும் தவறவில்லை. அதற்காக அவருக்கு 20 டாலர்கள் டிப்ஸ் கொடுத்தேன்.
இதை பெற்றுக்கொண்ட அவர், இந்த 20 டாலர்கள் எனக்கான பெரிய உதவி என கூறியிருந்தார். அப்போது இந்தப் பணியை செய்ய அவருக்கு விருப்பமில்லை என்றும் குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் இந்த பணியை செய்து வருவதாக கூறினார். அதனால் உங்களால் முடிந்த உதவியை ஜாஸ்மினுக்கு செய்யுங்கள்’ என ரீட்டா ரோஸ் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழே ஜாஸ்மினின் ‘கேஸ் அப்’ விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவைப் படித்த பலரும் ஜாஸ்மினின் கேஸ் ஆப் செயலுக்கு அமெரிக்க டாலர்களை அனுப்பத் தொடங்கி உள்ளனர். 1, 2 என தொடங்கி தற்போது 10 ஆயிரம் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 7 லட்ச ரூபாய்) கடந்து சென்று கொண்டுள்ளது. இது குறித்து தெரிவித்த ஜாஸ்மின், ‘எனது போனில் உள்ள கேஸ் அப் செயலியின் நோட்டிஃபிகேஷன் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உதவிய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்