‘ஆர்டர் பண்ணி எவ்ளோ நேரமாச்சு’... 'கடும் பசியில், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த'... 'உறைய வைக்கும் சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வரப்பட்டதால், கடும் பசியில் இருந்த வாடிக்கையாளர், ‘வெயிட்டரை’ சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸில் நாயிசி-லீ-கிராண்ட் எனும் இடத்தில் உள்ள ‘பீசா மற்றும் சான்ட்விச்’ கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சான்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டரை எடுத்த உணவக ஊழியர், வெகு தாமதமாகவே உணவை தயார் செய்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் பசியில் இருந்த வாடிக்கையாளர், வெயிட்டரை சரமாரியாக திட்டியதோடு, தான் வைத்திருந்த துப்பாக்கியால் உணவக ஊழியரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த சக வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக ஊழியர்களை அச்சத்தில் உறைய செய்தது.
இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஊழியரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க முயன்றனர். ஆனால் அவர் ஆம்புலன்சில் வரும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய வாடிக்கையாளரை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த உணவகம் புதிதாக அங்கு திறக்கப்பட்டது.