‘ஆளே இல்ல ஆனா...' 'ட்ரெஸ்' மட்டும் 'நடந்து வருது...' 'இது' என்ன 'புது' விதமான 'பேஷன் ஷோ...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காங்கோ கிங்டமின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிஃபா நடத்திய வித்தியாசமான பேஷன் கேட்வாக் ஷோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘ஆளே இல்ல ஆனா...' 'ட்ரெஸ்' மட்டும் 'நடந்து வருது...' 'இது' என்ன 'புது' விதமான 'பேஷன் ஷோ...'

மேற்கு மத்திய ஆஃப்ரிக்க நாடான காங்கோ கிங்டமின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிஃபா முவெம்பா. இவர் சமீபத்தில் வெர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் மாடல்கள் இல்லாமல் பேஷன் உடைகள் கேட்வாக் செய்ய ஓர் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

ஹனிஃபா என்ற பிரபல பேஷன் பிராண்டின் விளம்பரத்துக்காக அனீஃபா இந்த வகை கேட்வாக்கை உருவாக்கி உள்ளார். இதில், விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலமாக மாடல்கள் இல்லாமல் உடைகளின் வடிவங்கள் மட்டும் இருட்டில் காற்றில் மிதந்து பார்வையாளர்களை நோக்கி நடந்து வருவதுபோல காட்சி படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அனீஃபா, எதிர்காலத்தில் பேஷன் கேட்வாக்குகள் இதுபோலவே நடைபெறும் என்றார். அனீஃபாவின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்