110 பாம்புகளை வளர்த்து வந்த ஜெர்மன் பெண்.. நேரில் சென்ற போலீஸாருக்கும் மருத்துவர்களுக்கும் காத்திருந்த ஷாக்.!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் பெண் ஒருவர் தன் வீட்டுப் பண்ணையில் பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். அப்போது அவருடைய பண்ணையில் இருந்த சுமார் 110 பாம்புகளில் ஒரு பாம்பு அவரை கடித்ததால் அவர் மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாகியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியின் என்கிற இடத்தில் இருந்த மருத்துவமனை ஒன்றுக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார். மேலும் வந்த அவர் தன்னை பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிவிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவருடைய நிலை தடுமாறிப் போக நடந்ததை தெரிந்துகொள்ள மருத்துவகள் முடிவு செய்தனர்.
மேலும் Hamburg என்கிற ஊரில் இருக்கும் சிறப்பு நிறுவனம் ஒன்றில், பாம்பு கடிக்கான மருந்துகளையும் அந்த மருத்துவர்கள் ஆர்டர் செய்திருக்கின்றனர். அத்துடன் இந்த பெண்ணின் பாம்பு பண்ணையை பார்த்தே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் புறப்பட்டும் சென்றிருக்கின்றனர்.
அத்துடன் போலீசருக்கும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்பு பண்ணைக்கு ஒருவழியாக சென்று பார்த்த போதுதான், மருத்துவர்கள் மட்டுமல்லாமல் போலீஸாரும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாகினர். காரணம் அந்தப் பெண்ணின் பண்ணையில் ஏராளமான பாம்புகள் வளர்க்கப்பட்டு வருவதுடன் அவற்றில் 110க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருந்தை அறிந்தனர்.
அதன் பின்னர் நிபுணர்களின் உதவியுடன் பாம்புகளைக் கைப்பற்றி, நடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
மற்ற செய்திகள்