Valimai BNS

நமக்கு எதுவும் ஆகாதுடா.. உக்ரைனில் பொழியும் குண்டு மழை.. காதல் ஜோடியின் தவிப்பு.. வைரல் புகைப்படத்தின் பின்னணி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன்: ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் கியேவ் மெட்ரோ நிலையத்தின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

நமக்கு எதுவும் ஆகாதுடா.. உக்ரைனில் பொழியும் குண்டு மழை.. காதல் ஜோடியின் தவிப்பு.. வைரல் புகைப்படத்தின் பின்னணி

பதபதைக்க வைக்கும் சாட்டிலைட் போட்டோ.. என்ன நடக்கிறது உக்ரைனில்? பேரதிர்ச்சியில் உலக மக்கள்

உக்ரைன் அதிபர் வேதனை:

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் மக்கள் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை தாக்கிவருகிறது. முதலில் ஆதரவு தெரிவித்த நாடுகளும் கைவிட்டு தற்போது போரில் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர்?

ரஷ்யப்படைகள் ஒவ்வொரு பகுதிகளாக குண்டு மழை பொழிந்து முன்னேறி வருகிறது. முக்கியமான தளவாடங்களை காப்பாற்றி வருகிறது. செர்நோபில் அணுமின் நிலையத்தையும் கைப்பற்றி உள்ளதாக மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலைமை மிகவும் மோசமாகி கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் உலகப்போரை நெருங்கிக் கொண்டிருக்கிறதா என உலக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பெற்றோர்கள் கலக்கம்:

இந்த போரினால் ஏற்படும் விளைவுகள் என்பது சம்பந்தப்பட்ட இருநாடுகள் மட்டுமின்றி இந்தியா போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கும். இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக சென்று திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது பெற்றோர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

viral photo of Kiev metro station during Russia-Ukraine war

அன்பின் ஆழம்:

இந்நிலையில், கியேவ் மெட்ரோ நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் ஆழமான காதலை வெளிப்படுத்தும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், 'ரஷ்யா போட்ட குண்டின் காரணமாக கட்டடங்கள் முழுவதும் புகைமூட்டம். கியேவ் மெட்ரோ நிலைத்தில் மக்கள் பதற்றத்துடன் குழந்தைகளை சுமந்துகொண்டு அங்கும் இங்குமாக சிதறி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

சிலர், தொலைபேசியில் தங்கள் அன்புக்குரியவர்களையும், குடும்பத்தினரையும்  தொடர்பு கொண்டு இருக்கின்றனர்'. அந்த புகைப்படத்தில் இருக்கும் அனைவரின் கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. காதல் ஜோடி தங்களை மறந்து அன்பின் மிகுதியில் இனிமேல் நம்மால் சேர்ந்து வாழ முடியுமா என்ற பரிதவிப்புடன் நிற்கின்றனர். இது இறுதி விடையா அல்லது இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையா என தெரியவில்லை.

யாருமே எங்களுக்கு உதவி பண்ணல.. முதல்ல சப்போர்ட் பண்ணினவங்களும் இப்போ ரஷ்யாவ கண்டு பயப்படுறாங்க.. உக்ரைன் அதிபர் உருக்கம்

KIEV METRO STATION, RUSSIA-UKRAINE WAR, ரஷ்யா, உக்ரைன், ரஷ்யா உக்ரைன் போர்

மற்ற செய்திகள்