ஆளே இல்லாமல் திறந்த ஹாஸ்பிடல் கதவு?!.. யார் கிட்ட பேசுறாரு செக்யூரிட்டி?. வந்தது ஒரு நாள் முன்னாடி இறந்த பொண்ணா.? திகில் சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இணையத்தில் அவ்வப்போது நாம் நேரத்தை செலவிடும் போது, நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆளே இல்லாமல் திறந்த ஹாஸ்பிடல் கதவு?!.. யார் கிட்ட பேசுறாரு செக்யூரிட்டி?. வந்தது ஒரு நாள் முன்னாடி இறந்த பொண்ணா.? திகில் சம்பவம்

Also Read | ஒரு நாளைக்கு 4500 பேரா.?.. தமிழகத்தில் வேகமெடுக்கும் MEDRAS EYE .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன ?

வெறுமென இயல்பான விஷயமாக இல்லாமல், சில நேரங்களில் மிகவும் வினோதமான அல்லது அதிர்ச்சி நிறைந்த வகையில் கூட இருக்கும் வேளையில், இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மிரள வைக்கும்.

அதே போல, அமானுஷ்யம் நிறைந்தது போல இருக்கும் சில வீடியோக்கள் அல்லது செய்திகள் கூட அடிக்கடி இணையத்தில் வலம் வருவதை நாம் பார்த்திருப்போம்.

இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வெளியாகி பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது. அர்ஜெண்டினாவில் மருத்துவமனை ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Viral hospital cctv video security speaks alone incident

இது தொடர்பாக வெளியான வீடியோவின் படி, அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் பாதுகாவலர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் மருத்துவமனையின் வாசல் ஆளே இல்லாமல் கதவு ஆட்டோமெட்டிக்காக திறக்க அங்கே யாரும் வருவதே தெரியவில்லை. ஆனால், அந்த பாதுகாவலரோ ஒரு நபர் அங்கே நிற்பது போல, அவரை வரவேற்று மருத்துவர் அறைக்கு அனுப்பி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவரது பெயர் விவரங்களை எழுதிக் கொள்வது போலவும் தெரிகிறது. இதன் பின்னர் மருத்துவர் அறை செல்லவும் அவர் வழிகாட்டுகிறார்.

Viral hospital cctv video security speaks alone incident

ஆனால், வீடியோவில் பாதுகாவலர் தவிர வேறு எந்த நபரும் அங்கே நிற்பது போல தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து, சில மணி நேரத்திற்கு பிறகு உள்ளே சென்ற பாதுகாவலர் ஒரு பெண் வந்ததாகவும் அவரை காணவில்லை என்றும் மருத்துவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நோயாளி யாரும் வரவில்லை என மருத்துவர் தெரிவித்த நிலையில், தான் சந்தித்த பெண் நோயாளியின் பெயர் விவரத்தையும் மருத்துவரிடம் அவர் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது.

அந்த பெயர் கொண்ட பெண் நோயாளி ஒரு நாளுக்கு முன்பாக அதே மருத்துவமனையில் மரணம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கு மத்தியில், மருத்துவமனையில் உள்ள கதவு தானாக திறந்து பாதுகாவலர் எழுந்து சென்று யாரிடமோ பேசுவது போன்ற CCTV காட்சிகள் பலரது மத்தியில் பகீர் கிளப்பி இருந்தது.

Viral hospital cctv video security speaks alone incident

மேலும் இந்த திகில் சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில், சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி, மருத்துவமனையில் உள்ள கதவில் பிரச்சனை இருப்பதால் யாரும் இல்லாமல் கூட அடிக்கடி திறந்து கொண்டே இருக்கும் என்றும், அதை பயன்படுத்தி அந்த பாதுகாவலர் Prank செய்திருக்க கூடும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே போல, அந்த பெண் பெயர் கூட மருத்துவமனையில் அன்று வந்ததாக பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read | "புருஷன காணோம்ங்க ஐயா".. விசாரணையில் இறங்கிய போலீஸ்.. கடைசில சிக்கிய அம்மாவும், மகனும்".. நடுங்க வைத்த பயங்கரம்!!

HOSPITAL, CCTV CAMERA, SECURITY, SPEAKS

மற்ற செய்திகள்