இளம் பெண்ணுக்காக.. 10 வருஷம் சேர்ந்து வாழ்ந்த மனைவியை பிரிந்த கணவர்? அவரே சொன்ன பரபரப்பு காரணம்..
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் நாட்டிலிருந்து அகதியாக வந்த இளம் பெண்ணுக்காக, மனைவியைக் கைவிட்ட ஒரு பிரித்தானியர்.
அதுவும் சாதாரணமாக இல்லை. இந்த வேலையை செய்ததாக கூறப்படும் டோனி (Tony Garnett, 29) என்பவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தம்முடன் வாழ்ந்த தன் மனைவியையும், 2 மகள்களையும் பிரிந்து அந்த பெண்ணுடன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக பிரிட்டனை சேர்ந்தவர்கள், உக்ரைனிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்காக தங்கள் வீடுகளில் இடம் அளிக்க முன்வந்தனர். இந்த ஒரு சூழலில்தான் டோனி (Tony Garnett, 29), லோர்னா (Lorna, 28) என்கிற தம்பதியர் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற உக்ரைனிய பெண்ணை வீட்டில் சேர்த்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த பெண்ணை டோனி காதலிக்க தொடங்க, அவ்வளவுதான், சுமார் 10 ஆண்டுகள்தான், சேர்ந்து வாழ்ந்த மனைவியையும் தமது இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, அந்த புதுப் பெண்ணான சோபியாவுடன் வெளியே சென்றுவிட்டார். சோபியாவுடன் டோனியும் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, சோபியா தன் கணவரை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டார் என லோர்னா குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் உண்மையில் தமது குடும்பத்தில் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சனை இருப்பதாகவும், அதேசமயம் அகதியாக வந்த சோபியாவுக்கு ஏகப்பட்ட அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கூறிய டோனி, அவரை பாதுகாக்கும் பொருட்டு அவருடன் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் லோர்னாவை திருமணம் செய்துகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்