2025-ம் ஆண்டுக்கு அப்புறம் ரோட்டுல ‘பைக்’ ஓட்ட தடை.. என்ன காரணம்..? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்வியட்னாமில் வரும் 2025-ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியட்நாம் (Vietnam) நாட்டின் தலைநகர் ஹனோய் (Hanoi), சுற்றுலா பயணிகளின் முக்கிய தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஹனோய் நகரில் சுமார் 56 லட்சம் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வியட்நாம் அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 2025-ம் ஆண்டிலிருந்து ஹனோய் நகரின் அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக சில முக்கிய சாலைகளில் இந்த தடை அமலுக்கு வரும் என்றும், பின்னர் 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்று வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்