'மொத்தம் 34 பேர்...' 'கெத்தா ஜெயிச்ச விவசாயி மகள்...' - உலக அழகி போட்டிக்கு போக செலெக்ட்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வியட்நாம் நாட்டின் சார்பாக உலக அழகிப் போட்டியில் கலந்துக்கொள்ள இருக்கிறார் 20 வயதுப் பெண் ஒருவர்.

'மொத்தம் 34 பேர்...' 'கெத்தா ஜெயிச்ச விவசாயி மகள்...' - உலக அழகி போட்டிக்கு போக செலெக்ட்...!

இன்னபிற போட்டியாளர்களைப் போல் அல்லாமல், மாறுபட்ட எளிய குடும்ப பின்னணியைக் கொண்டுள்ளார் டோ தி ஹா.

மொத்தம் 34 போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆவார். அவரது தந்தை ஒரு விவசாயி. பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் அவர், சுமார் 20,000 வெள்ளி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

                       Vietnam farmer's daughter is to attend the miss world

படித்துக்கொண்டே பகுதி நேரமாக வேலை செய்கிறார் டோ தி ஹா. அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டபோது பெற்றோரிடமிருந்து நிறைய ஆதரவும் ஊக்கமும் கிடைத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் உலக அழகிப் போட்டியில் டோ தி ஹா வியட்நாம் நாட்டை பெருமைப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மற்ற செய்திகள்