‘39 பேரின் சடலங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற போலீஸார்’..
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டன் அருகே ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கிரேய்ஸ் என்ற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி குறித்து அப்பகுதி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்ய சென்ற போலீஸார் அதில் 39 பேரின் சடலங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த லாரி பல்கேரியாவிலிருந்து ஹோலிஹெட் வழியாக கடந்த 19ஆம் தேதி பிரிட்டனுக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த லாரியை ஓட்டிவந்த அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள தலைமை போலீஸ் அதிகாரி ஆண்ட்ரிவ் மாரினர், “நாங்கள் சடலமாகக் கிடைத்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும்” எனக் கூறியுள்ளார். கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.