Naane Varuven M Logo Top

திடீர்னு வானத்தில் தோன்றிய டிராகன்.. ஒருநிமிஷம் ஆடிப்போன மக்கள்.. அப்பறம் தான் விவரமே தெரிஞ்சிருக்கு.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரவு வானில் டிராகன் தோன்றும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திடீர்னு வானத்தில் தோன்றிய டிராகன்.. ஒருநிமிஷம் ஆடிப்போன மக்கள்.. அப்பறம் தான் விவரமே தெரிஞ்சிருக்கு.. வைரலாகும் வீடியோ..!

Also Read | 50 வயசானவங்க இந்த டெஸ்ட்-ல பாஸ் பண்ணவே முடியாதாம்.. ஆனந்த் மஹிந்திராவின் லேட்டஸ்ட் ட்வீட்.. இத வாசிச்சிட்டா நீங்க கில்லாடிதான்..!

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு தான் டிரோன்கள். இதனை கொண்டு இரவு நேரத்தில் டிராகனை தோன்றச் செய்து அசத்தியிருக்கிறது நிறுவனம் ஒன்று. கடந்த வியாழக்கிழமை அன்று யூடியுப் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. 1000 டிரோன்கள் மூலமாக இந்த அசரவைக்கும் நிகழ்வை செய்திருக்கின்றனர் நிபுணர்கள். இரவு வானில் டிராகன் தனது உடலை அசைத்து வருவதை போன்று டிரோன்கள் துல்லியமாக இயக்கப்பட்டிருக்கின்றன. இதனை மக்கள் பிரம்மிப்போடு பார்த்திருக்கின்றனர்.

டிரோன்கள்

இருப்பினும், இந்த நிகழ்ச்சி எங்கே நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் ஏதும் பகிரப்படவில்லை. இதே வீடியோவை Tansu Yegen என்பவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை இதுவரையில் 17 மில்லியன் மக்கள் பார்த்திருக்கின்றனர். இந்த வீடியோவினை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். மேலும், பலரும் "இந்த நிகழ்ச்சி எங்கே நடைபெற்றது" எனவும், "டிரோன்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Video Shows 1000 Drones Creating A Giant Dragon In The Night Sky

பார்ப்போரை கவர்ந்திழுக்கும் இந்த டிரோன் அணிவகுப்பை ஜியோஸ்கேன் எனும் நிறுவனம் ஒருங்கமைத்திருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த இந்த நிறுவனம் உலகமெங்கிலும் தனித்துவமான டிரோன் கண்காட்சிகளை நடத்திவருகிறது. ஒரே நேரத்தில் 5000 டிரோன்களை பயன்படுத்தும் பிரம்மாண்ட திட்டங்களிலும் இந்த நிறுவனம் இயங்க இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

கண்காட்சி

டிரோன் கண்காட்சி நடைபெறும் நாளில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இதுகுறித்த பணியில் இறங்கிவிடுகிறது இந்த நிறுவனம். அதன்பிறகு இசைக்கோர்வை தேர்வு, அதற்கான டிரோன்களை தேர்ந்தெடுத்தல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. இறுதியாக கண்காட்சி நடைபெறுவதற்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன்னர் ஒத்திகையும் நடத்தப்படுகிறது. 2198 டிரோன்களை பயன்படுத்தி பிரம்மாண்ட நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்தி உலக சாதனையையும் படைத்திருக்கிறது இந்த நிறுவனம்.

Video Shows 1000 Drones Creating A Giant Dragon In The Night Sky

இந்நிலையில், சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டிராகன் டிரோன் கண்காட்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | காதலியிடம் Propose செய்த காலை இழந்த ராணுவ வீரர்.. சட்டுன்னு இளம்பெண் கொடுத்த பதில்.. 2 கோடி பேரை ஈர்த்த வீடியோ..!

GIANT DRAGON, 1000 DRONES, NIGHT SKY

மற்ற செய்திகள்