LIGER Mobile Logo Top

ஜாம்பி பூச்சி என்ற பெயரில்.. இணையத்தில் வலம் வரும் வீடியோ.. முழுசா பாத்துட்டு குழம்பி போய் கிடக்கும் நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக அளவில் ஏராளமான ஜாம்பி திரைப்படங்கள் வெளியாகி மக்கள் பலரது மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற பட்டியல் ஏராளமாக உள்ளது.

ஜாம்பி பூச்சி என்ற பெயரில்.. இணையத்தில் வலம் வரும் வீடியோ.. முழுசா பாத்துட்டு குழம்பி போய் கிடக்கும் நெட்டிசன்கள்!!

ஜாம்பி என்றால், திடீரென மனிதர்கள் ஒரு மிருகம் போல மாறி, மற்ற நபர்களை கடித்து அவர்களுக்கும் அந்த நோயை பரப்புவது என்பது திரைப்படங்களில் வரும் காட்சிகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

அப்படி இருக்கையில், நிஜ வாழ்வில் இந்த ஜாம்பி மனிதர்கள் இல்லை என்றாலும் தற்போது பூச்சி ஒன்று தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் கடுமையான குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்ட நபர், தன்னுடைய கேப்ஷனில், "இது ஒரு ஜாம்பி பூச்சி. இது உயிருடன் இல்லை. அதே வேளையில் இது சாகவும் இல்லை. இந்த உலகில் பிற உயிரினங்களை தாக்கி அவற்றின் மூளையை கட்டுப்படுத்தும் பூஞ்சைகள் ஏராளம் உள்ளன. அப்படி ஒரு புஞ்சை மூலம் தாக்கப்பட்டு சாகாமலும் உயிரற்றும் இயங்கும் பூச்சிகள் இவை" என அதில் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் பூச்சி ஒன்று, உடல் பாகங்கள் எதுவும் இல்லாத நிலையில் தலை பாகங்கள் மட்டுமே இருப்பது போல, கிட்டத்தட்ட பாதி உயிரிழந்த நிலைமையில் தான் இருக்கின்றது. இந்த வீடியோ காண்போர் பலரையும் பதற்றத்துக்கு ஆளாக்கி உள்ள நிலையில், பத்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் இந்த வீடியோ கடந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

ஒரு சிலர் இந்த ஜாம்பி பூச்சி தொடர்பான கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ், நிறைய அறிவியல் பூர்வமாக விஷயங்களை பகிர்ந்து விளக்கம் கூறி வருகின்றனர். அதே வேளையில், மற்ற சிலர் இந்த பூச்சி ஏதேனும் ஒரு பறவை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக இந்த உடல் பாதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டு, ஜாம்பி பூச்சி என்ற கருத்தினை முற்றிலுமாக மறுத்தும் வருகின்றனர்.

காரணம் எதுவாக இருந்தாலும் ஜாம்பி பூச்சி என்ற பெயரில் வலம் வரும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

VIRAL, ZOMBIE, BUG

மற்ற செய்திகள்