ராணுவத்துக்கு மகனை வரவேற்ற மூத்த வீரர்.. நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ராணுவத்தில் இணைந்த மகனுக்கு தந்தை பேட்ஜ் அணிவிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | அப்போ அது இலை இல்லையா?.. இயற்கையின் ஆச்சர்ய படைப்பு.. நெட்டிசன்களை திகைக்க வச்ச வீடியோ.!
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக நெகிழ்ச்சியான விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் ராணுவத்தில் இணைந்த மகனுக்கு தந்தை பேட்ஜ் அணிவிக்கும் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக ராணுவத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி எல்லாம் முடிந்த பிறகு பேட்ஜ் அணிவிக்கப்படும் நிகழ்வு வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்கும். அந்த முக்கியான தருணத்தில் நம் அன்புக்கு உரியவர்கள் நம்முடன் இருக்க வேண்டும் என பல வீரர்களும் விரும்புவது உண்டு. அந்த வகையில், அமெரிக்காவில் சமீபத்தில் பயிற்சி முடித்து பேட்ஜ் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதனை காண வீரர் ஒருவரின் தந்தை சென்றிருக்கிறார்.
அமெரிக்க கடற்படை வீரரான அவர் தனது மகன் பேட்ஜ் பெறுவதை பார்க்க ஆசையுடன் வந்திருக்கிறார். அப்போது, அவரிடம் பேட்ஜ் கொடுக்கப்பட்டு மகனுக்கு அணிவிக்க சொல்லி இருக்கின்றனர் அதிகாரிகள். இதனையடுத்து, அவரும் தனது மகனுக்கு பேட்ஜை அணிவிக்கிறார்.
அதன்பிறகு, இருவரும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வீடியோவை இளம் வீரரின் பாட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் அதில்,"முழு விழாவிலும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். கடற்படை வீரர் தனது மகனுக்கு இராணுவ பேட்சை அணிவிக்கிறார். நான் மிகவும் பெருமையடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரையில் 4 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்