IKK Others
MKS Others

VIDEO: எப்படிங்க பறக்குறாரு...? 'மேஜிக்' கார்பெட் அடியில 'என்ன' இருக்கு...? - 'சீக்ரெட்' உடைத்த யூ-டியூபர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அலாவுதீன் வேடமிட்ட ஒருவர் பறக்கும் கம்பளத்துடன் பறக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

VIDEO: எப்படிங்க பறக்குறாரு...? 'மேஜிக்' கார்பெட் அடியில 'என்ன' இருக்கு...? - 'சீக்ரெட்' உடைத்த யூ-டியூபர்...!

துபாயைச் சேர்ந்த RhyzOrDie என்ற யூ-டியூபர் உருவாக்கிய வீடியோவில், அவர் அலாவுதீன் போன்று வேடமணிந்துள்ளார். மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால், அவர் தனது காற்றில் மிதக்கும் கம்பளத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு மேஜிக் காட்சியை வழங்கியுள்ளார்.

RhyzOrDie என்ற பெயர் கொண்ட யூ-டியூப் சேனலில் இருந்து வந்த வீடியோ கிளிப்பில் அந்த நபர், வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் அலாவுதீன் ஆடையணிந்து, தெருக்களில், வீதிகளில் பறக்கும் கம்பளத்தின் மீது நின்றபடி பறப்பதை போல காட்சி படுத்தப்பட்டுள்ளது. அவரைச் சுற்றிய இருக்கும் மக்கள் இந்த காட்சி எப்படி சாத்தியம் என குழப்பமடைந்துள்ளனர்.

எலக்ட்ரானிக் லாங்போர்டைச் சுற்றி PVC பைப் பிரேமை வடிவமைத்து RhyzOrDie ஒரு 'மிதக்கும்' கம்பளத்தை தயாரித்துள்ளார். பிறகு, அவர் அதன் மேல் ஒரு கம்பளத்தை பொருத்தியுள்ளார். அந்த கம்பளம் பார்ப்பதற்கு ஒரு மாயாஜால கம்பளம் போன்ற தோற்றத்தை தருகிறது.

யூடியூபர் பின்னர் தன்னுடைய சர்ஃப்போர்டில் ஒரு கம்பளத்தை பொருத்தி, அதை கடலில் ஒரு சர்ஃபிக்காக எடுத்துச் செல்வதன் மூலம் இதன் உண்மையை தெளிவாக விளக்கியுள்ளார்.

RhyzOrDie-ன் இரண்டு நிமிடங்கள் 54 வினாடி கொண்ட அந்த மேஜிக் வித்தை வீடியோவை இதுவரை லட்சக்கணக்கிலான மக்கள் பார்த்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் தனது பறக்கும் சவாரியின் ரகசியங்களைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்த மேஜிக் கார்பெட் ஸ்டண்டின் பின்னால் உள்ள ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த  வீடியோவில், யூடியூபர் தனது ஸ்டண்டிற்கு 'eFoil போர்டு' என்ற போர்டை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதன் பொருள் அவர் ஒரு மின்சார ப்ரொப்பல்லருடன் கூடிய சர்ப்போர்டை இந்த மேஜிக்கிற்கு பயன்படுத்தியுள்ளார்.

RHYZORDIE, DUBAI, FLY, ALAUDIN

மற்ற செய்திகள்