"என்னம்மா இது.. இப்படி பின்னி வச்சிருக்க".. ஹேர்ஸ்டைல் பற்றி அம்மாவுக்கே அட்வைஸ்.. வைரலாகும் சிறுமியின் கியூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஹேர்ஸ்டைல் குறித்து தனது அம்மாவுடன் சிறுமி ஒருவர் விவாதிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே பலதுறை குறித்த அறிவோடு குழந்தைகள் வளர்கிறார்கள். அதிலும் குறிப்பாக மேக்கப் குறித்த ஆர்வம் சிறுமிகளுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. இணையத்தில் சிகை அலங்காரத்தின் வகைகள் துவங்கி அலசி ஆராய்ந்து விடுகிறார்கள் இந்த சுட்டீஸ்கள். அப்படி சிறுமி ஒருவர் தனது அம்மாவுடன் செய்யும் கியூட்டான வாக்குவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு சிறுமி கண்ணாடியை பார்த்தபடி நிற்கிறார். அவருக்கு தலைவாரி கொண்டிருக்கிறார் அவரது அம்மா. அப்போது தனக்கு இரண்டு பக்கமும் ஜடை வரும்படி பின்னும்படி மழலை மொழியில் அறிவுரை வழங்குகிறார் அந்த சிறுமி. அப்போது, இதை தான் நேற்றே சொன்னதாகவும், ஏன் அது உங்களுக்கு புரியவில்லை? என்றும் அம்மாவுக்கே டோஸ் விடுகிறார் இந்த சிறுமி.
அப்போது, தனக்கு நேற்று சொன்னது புரியவில்லை எனவும் மீண்டும் சொல்லும்படியும் கேட்கிறார் அம்மா. உடனே தனக்கு விருப்பமான ஹேர்ஸ்டைல் குறித்து விவரிக்க துவங்கிவிடுகிறார் சிறுமி. ஆனால், அதற்குள்ளாகவே அம்மா ஜடையை பின்னி முடித்திருக்கிறார். இரு பக்கமும் ஜடை வரும்படி சிறுமி கேட்டுக்கொண்டிருக்க, பின்னால் ஒரு ஜடையை அம்மா பின்னி வைக்க, என்னது இது? என சிறுமி ஷாக் ஆக இவர்கள் இருவரையும் ஆஃப் செய்யும் விதமாக இன்னொரு குழந்தை அழுகிறது.
குழந்தையை சமாளித்துவிட்டு மீண்டும் தலைவார வந்த அம்மா, இதுதான் இன்றைய கடைசி ஹேர்ஸ்டைல் என்று கூறி அவசர அவசரமாக பின்னத் தொடங்குகிறார். இறுதியில் சிறுமி கேட்டதுபோலவே ஹேர்ஸ்டைல் அமைந்துவிட்டதாக மகிழ்ச்சியடைகிறார். இந்த வீடியோவை 'திஹன்னாஃபேமிலி' எனும் பயனர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கையில் பொம்மையுடன் அம்மாவுக்கு அட்வைஸ் கொடுக்கும் இந்த சிறுமியின் வீடியோவை இதுவரை 2.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 1.32 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் அந்த சிறுமியின் அம்மாவுடைய பொறுமையை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்