LIGER Mobile Logo Top

என்னங்க இவ்வளவு கலரா இருக்கு.. இப்படியும் ஒரு வாத்து இனமா..? வைரலாகும் வாவ் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பல வண்ணங்களை கொண்ட வாத்து ஒன்றின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

என்னங்க இவ்வளவு கலரா இருக்கு.. இப்படியும் ஒரு வாத்து இனமா..? வைரலாகும் வாவ் வீடியோ..!

இணையத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு பல நன்மைகளை கொடுத்திருக்கிறது. தகவல் தொடர்பு துறை இன்றைய நவீன உலகில் மிகப்பெரும் உயரத்தை அடைந்திருக்கின்றன. உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் அடுத்த வினாடியே தெரிந்துகொள்ள முடிவதற்கு நமக்கு இணையம் உதவுகிறது. இதன்பலனாக சமூக வலை தளங்கள் மக்களிடையே பிரபலமாகியிருக்கின்றன. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அல்லது வினோதமான வீடியோக்களுக்கு சமூக வலை தளங்களில் எப்போதும் பஞ்சமே இருப்பதில்லை. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வாத்து வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

வைரல் வீடியோ

பொதுவாக வாத்துகள் வெண்மையான நிறத்தில் இருப்பதையே பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோவில் வலம்வரும் ஒரு குட்டி வாத்தின் உடல் முழுவதும் பல வண்ணங்கள் இருக்கின்றன. இதனாலேயே பலரும் இந்த வீடியோவை ஆச்சர்யத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். இதுவரையில் 1.2 மில்லியன் முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை 27,000 பேர் லைக் செய்திருக்கின்றனர்.

Video Of A Mandarin Duck going viral in social media

இந்த வீடியோ பதிவில்," இது ஒரு ஆண் மாண்டரின் வாத்து. பருவமடைந்த பிறகு ஆண் வாத்துகள் தங்களது இணையை கவரும் வகையிலான இந்த வண்ணங்களை பெறுகின்றன. இந்த வாத்துகள் சில நாடுகளில் காதல் மற்றும் நம்பகத்தன்மையின் சின்னமாக கருதப்படுகின்றன. ஏனெனில் இந்த வகை வாத்துகள் ஒரு இணையுடன் மட்டுமே வசிக்கும் தன்மையுடையவை. இதனாலேயே தம்பதியினருக்கு இடையேயான நெருக்கத்தை குறிக்கும் வகையில் இந்த வாத்துகள் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாண்டரின் வாத்து

கிழக்கு ஆசியாவை தாயகமாகக்கொண்ட இந்த வாத்துகள் தற்போது ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வசிக்கின்றன. இந்த வகை வாத்துகளில் ஆண் இனங்களுக்கு மட்டுமே இதுபோன்ற பல்வகை வண்ணங்கள் உடலில் அமைந்திருக்கின்றன. ஆறுகள், ஏரிகள், புதர்கள் போன்ற வாழிடங்களில் இவை அதிகம் வசிக்கின்றன. அழகான தோற்றத்திற்காகவே இது பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இருப்பினும் தற்போதைய நிலையில் இதன் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

MANDARIN, DUCK, VIDEO, மாண்டரின் வாத்து, வீடியோ

மற்ற செய்திகள்