'எனக்கு ஜாலியா இருக்க முடியல'...'புற்று நோயோடு போராட்டம்'...செவிலியரின் நெகிழ வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரத்த புற்று நோயோடு போராடி வரும் சிறுமியை மகிழ்விக்க செவிலியர் செய்த செயல் பலரையும் நெகிழ செய்துள்ளது.

'எனக்கு ஜாலியா இருக்க முடியல'...'புற்று நோயோடு போராட்டம்'...செவிலியரின் நெகிழ வைக்கும் வீடியோ!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், அமெரிக்காவில் கொண்டாட்டங்கள் தற்போதே ஆரம்பித்து விட்டன. மக்கள் பலரும் ஓளிரும் நட்சத்திரங்கள், வண்ண விளக்குகளை வீட்டில் அலங்கரிப்பது என தங்களது கொண்டாட்டங்களை தொடங்கி விட்டார்கள். ஆனால் கரோலினா மாகாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமி மருத்துவமனையில் இருப்பதால் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாட்டதிற்கு தயாராகி வரும் நிலையில், தான் மட்டும் மருத்துவமனையில் இருப்பது அவருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த அந்த மருத்துவமனையின் செவிலியர் ஒருவர், கிறிஸ்துமஸ் பாடலுக்கு நடனமாடி அந்த சிறுமியை சிரிக்க வைத்துள்ளார்.

சிறுமியின் தந்தை அந்த வீடியோவை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த செவிலியரை கடவுளின் ஏஞ்சல் என பாராட்டி வருகிறார்கள். போராட்டம் நிறைந்த வாழ்க்கையில், மனமுடைந்து நொறுங்கி போகும் வேளையில் இது போன்றவர்களின் செயல் நிச்சயம் ஊக்கம் அளிக்கும் என்றே சொல்லலாம்.

HOSPITAL, NURSE, CHRISTMAS, CHRISTMAS SONG, LEUKEMIA, DANCE, MONROE, CANCER