அமெரிக்காவின் அட்லான்டா நகரில் பிரபஞ்ச அழகி 2019 போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நீச்சலுடையில் தோன்றி நடந்து வரும் போட்டி நடைபெற்றது. அப்போது அனைத்து நாட்டு அழகிகளும் தங்களுக்கே உண்டான ஸ்டைலில் நடை போட்டனர்.
அப்போது பிரான்ஸ் அழகி மேவா கூக்கே நடந்து வரும் போது மேடையில் ஈரப்பதம் இருந்துள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக வழுக்கி கீழே விழுந்தார். இதனால் போட்டியில் சற்று பரபரப்பு தொற்றி கொண்டது. இந்நிலையில் மேவா கூக்கே, சற்றும் பதற்றம் அடையாமல் பொறுமையுடன் எழுந்து புன்சிரிப்புடன் மீண்டும் நடை போட்டார். இதனை பார்த்த அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அவரை உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேவா கூக்கே பதிவிட்டுள்ளார். அதற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள பலரும் மேவாவை பாராட்டியுள்ளனர். விழுந்தாலும் ஒரு பெண் எழுந்து நிற்க வேண்டும், அது தான் பெண்ணின் சாராம்சம் என பலரும் பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
SWIMSUIT ROUND, MISS UNIVERSE 2019, MISS FRANCE, MISS MALAYSIA, MAEVA COUCKE, FALL ON RUNWAY
Video: Miss Universe Contestants Fall on Runway during Swimsuit Round | World Newshttps://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/video-miss-universe-contestants-fall-on-runway-during-swimsuit-round.html