“மதுபானத்தில் போதை மருந்தை கலந்த இளைஞர்கள்!”.. அதன் பிறகு நடந்த கொடூரம்.. குற்றத்தைத் தடுக்காத இளைஞர்களுக்கும் கிடைத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனியில் இளம்பெண்ணின் மதுபானத்தில் போதைப் பொருட்கள் கலந்து கொடுத்து அப்பெண்ணை இளைஞர்கள் சிலர் 2 மணி நேரமாக பலாத்காரம் செய்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

“மதுபானத்தில் போதை மருந்தை கலந்த இளைஞர்கள்!”.. அதன் பிறகு நடந்த கொடூரம்.. குற்றத்தைத் தடுக்காத இளைஞர்களுக்கும் கிடைத்த தண்டனை!

இதனை அடுத்து நடந்த அருகே உள்ள புதர் ஒன்றுக்கு அப்பெண்ணை தூக்கிச்சென்று போய் 18 வயதே ஆன அந்த இளம்பெண்ணை மாறி மாறி இளைஞர்கள் சிலர் வன்புணர்வு செய்தனர். துபானம் மற்றும் போதை பொருள் மயக்கத்தில் இருந்த. அந்தப் பெண்ணால் தனக்கு நடந்த கொடுமையை தடுக்க இயலாத நிலைமையில் இருந்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்றத்திற்கு வந்த இவ்வழக்கில், 11 இளைஞர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் படி முக்கிய குற்றவாளிகளுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்ற ஏழு பேருக்கு 3 முதல் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு பேருக்கு 4 மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உடனே அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி தவறியதற்காக இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் இந்த குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று கூறி வழக்கிலிருந்து முன்னமே விடுவிக்கப் பட்டிருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மட்டுமே ஜெர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என்பது மீதமுள்ளவர்கள் 8 பேர் சிரிய அகதிகள் என்பதும்தான்.

மற்ற செய்திகள்