அச்சச்சோ அந்த ஜாடியா?.. வேஸ்ட்-னு நெனச்சு ஒதுக்கி வச்ச குடும்பம்.. விருந்தாளி சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆடிப்போன உறவினர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தேவையில்லாதது என நினைத்து ஒதுக்கி வைத்திருந்த குடும்பத்தை கோடீஸ்வர்களாக மாற்றியுள்ளது ஒரு ஜாடி.
சமையலறையில் இருந்த பொக்கிஷம்
இங்கிலாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று பல வருடங்களாக ஒரு ஜாடியை தங்களது வீட்டு சமையலறையில் ஒதுக்கி வைத்திருக்கிறது. வீட்டில் உள்ள உறுப்பினர்கள் பலருக்கும் அந்த ஜாடி மீது எந்த ஆர்வமும் இல்லை. சொல்லப்போனால் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதாக நினைத்திருக்கின்றனர். இந்நிலையில், அந்த வீட்டிற்கு வந்த விருந்தாளி ஒருவர் அந்த ஜாடி குறித்து சொல்லச்சொல்ல அனைவருக்கும் தலையே சுற்றிவிட்டது.
சுமார் 250 ஆண்டு பழமையான இந்த ஜாடி, சீனாவின் பேரரசர் ஒருவருக்காக தயாரிக்கப்பட்டது. பீங்கானில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த ஜாடியை ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 1980 ஆம் ஆண்டு, 100 பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளார். அதன் பிறகு, தனது மகனுக்கு அந்த ஜாடியை வழங்கியுள்ளார் அந்த மருத்துவர்.
ஏலம்
ஜாடியை தனது தந்தையிடம் பெற்றுக்கொண்ட மகனும், வீட்டின் மூலையில் ஜாடியை வைத்துவிட்டார். அதன்பிறகு அதுவே அதன் இருப்பிடமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், அந்த வீட்டிற்கு வந்த விருந்தினர் ஒருவர் ஜாடியை பற்றி சொன்னவுடன் தனியார் ஏல நிறுவனத்தை நாடியுள்ளது குடும்பம். ட்ரீவீட்ஸ் ஏல நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் இந்த ஜாடியை ஆய்வு செய்து அதன் மதிப்பு 1.5 லட்சம் யூரோக்கள் என நிர்ணயித்தனர்.
இதனையடுத்து ஆன்லைன் மூலமாக ஜாடியை ஏலம் விட முடிவு செய்திருக்கின்றனர் அந்த குடும்பத்தினர். இந்நிலையில் ஏலம் துவங்கிய உடனேயே மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு விலையை ஏற்ற, குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு ஜாடியை வாங்க போராடியிருக்கிறார்கள்.
இறுதியாக 1,449,000 யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் 12.3 கோடி ரூபாய்) ஜாடியை ஒருவர் வாங்கியுள்ளார். இதனால் குடும்பத்தினர் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தேவை இல்லாதது என நினைத்து சமையலறையில் ஒதுக்கிவைக்கப்பட்ட ஜாடி ஒன்று, 12.3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையான சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்