'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிவதை குறைக்கும் வகையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட H-1B விசா திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவிருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!

கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவுக்கு தற்காலிக தடை விதித்தார். கொரோனாவால் தேக்கமடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வேலையிழக்கும் அபாயம் உருவானது.

இந்நிலையில், H-1B விசா திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, மிகச்சிறந்த வெளிநாட்டு 'திறமையாளர்களை' மட்டும் அமெரிக்காவில் பணி அமர்த்த ட்ரம்ப் அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும், H-1B விசா பெற்றவர்களின் மனைவி / கணவன், அமெரிக்காவில் வேலைசெய்ய தடை விதிக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.    

இதற்கிடையே, அமெரிக்காவில் பயிலும் அனைத்து மாணவர்களும், தாங்கள் பட்டம் பெற்ற பின் 1 வருடத்திற்கு அங்கேயே வேலை செய்வதில் எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்