‘பீர் வாங்க காசு கேட்ட இளைஞர்’.. ‘குவிந்த பணத்தால் திக்குமுக்காடிப் போய் செய்த காரியம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் விளையாட்டாக ஒரு இளைஞர் பீர் வாங்க காசு வேண்டுமெனக் கேட்க அவருக்கு பணம் வந்து குவிந்த சம்பவம் நடந்துள்ளது.

‘பீர் வாங்க காசு கேட்ட இளைஞர்’.. ‘குவிந்த பணத்தால் திக்குமுக்காடிப் போய் செய்த காரியம்’..

அமெரிக்காவைச் சேர்ந்த கார்சன் கிங் என்ற இளைஞர் காலேஜ் கேம் டே என்ற புட்பால் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு விளையாட்டாக அவர் கையில் வைத்திருந்த பலகையில், புஷ் லைட் பீர் வாங்க வேண்டும் என எழுதி அதோடு தனது இணையப் பணப் பரிவர்த்தனை செய்யும் வெண்மோ எனும் செயலியின் ஐடியையும் எழுதியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியதிலிருந்தே அவருடைய அக்கவுண்டிற்கு பணம் வரத் தொடங்கியுள்ளது. நன்கொடைகள் 1000 டாலரைத் தாண்ட அதை நம்ப முடியால் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் தனக்கு நன்கொடையாக வரும் பணத்தில் ஒரு கேஸ் பீருக்கு 15 டாலர்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தையெல்லாம் அப்பகுதியில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்கு நன்கொடையாக அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதைப்பார்த்த அனைவருக்கும் கார்சன் கிங்கின் செயல் பிடித்துப்போக அவருக்கு நன்கொடைகள் வந்து குவிந்துள்ளது. இந்த செய்தி அதிகம் பகிரப்பட அவருக்கு தற்போது வரை 67,000 டாலர்களுக்கு மேல் நன்கொடை வந்துள்ளது. இதையடுத்து இந்த மாதம் இறுதிவரை அவர் தனது கணக்கில் நன்கொடைகளை வழங்கலாம் எனக் கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக இதையறிந்த புஷ் லைட் பீர் நிறுவனம், கார்சன் எவ்வளவு நன்கொடை அளிக்கிறாரோ அதே அளவுக்கு தாங்களும் அந்த மருத்துவமனைக்கு நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. கார்சன் பயன்படுத்தும் பணப் பரிவர்த்தன நிறுவனமான வெண்மோவும், “நாங்கள் நிறைய நல்ல கதைகளைக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவே எங்கள் மனதுக்கு மிக நெருக்கமானது. கார்சன் எவ்வளவு நன்கொடை அளிக்கிறாரோ அதே அளவுக்கு நாங்களும் அந்த மருத்துவமனைக்கு நன்கொடை அளிப்போம்” எனக் கூறியுள்ளது. இதன்மூலம் தற்போது வரை அந்த மருத்துவமனைக்கு 2,00,000 டாலருக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

US, FOOTBALL, COLLEGE, FAN, BEER, MONEY, DONATION, SIGN, BUSCHLIGHT, VENMO