'10 முறை கல்யாணம்'... 'திருப்தி இல்லாததால் அனைத்து கணவர்களுடன் விவாகரத்து'... அடுத்த திருமணத்திற்கு போட்டுள்ள கண்டிஷன்!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் 10 முறை திருமணம் செய்தும் அதில் திருப்தி இல்லாததால் அடுத்த திருமணத்திற்குத் தன்னை தயார் செய்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயது பெண் கேசி. இவர் தனது முதல் கணவரைத் திருமணம் செய்த நிலையில் அவருடன் 8 வருடங்கள் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அதுதான் அவர் அதிகபட்சமாக வாழ்ந்த திருமண வாழ்க்கை ஆகும். குறைந்தபட்சமாக மற்றொரு கணவருடன் 6 வருடங்கள் வாழ்ந்து விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது வாழ்ந்து வந்த தனது 10வது கணவனிடம்'இருந்தும் விவாகரத்து பெற்றுள்ளார் கேசி.
இதுகுறித்து பேசிய கேசி, எனது திருமண வாழ்க்கையைப் பார்க்கும் போது பலருக்கும் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அதில் எவ்வளவு வலி இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். அதோடு தனது அடுத்த திருமணத்திற்காக ஒரு கண்டிஷனையும் கேசி போட்டுள்ளார். தன்னை மட்டுமே நேசிக்கும் ஒருவர் தனது வாழ்க்கையில் வரும் வரை தனது திருமணத்தை நிறுத்த போவதில்லை எனக் கூறியுள்ளார்.
10 திருமணங்கள் தோல்வி அடைந்தாலும் தனக்கு என்ற நபர் கிடைக்கும் வரை திருமணம் செய்வதில் எந்த தவறும் இல்லை என கேசி கூறியுள்ளார். ஒரு கணவரிடம் இருந்து எப்படி விவாகரத்து பெற்றுக்கொள்வேன் என்பதற்குப் பதிலளித்துள்ள அவர், ஒரு கணவனுடன் வாழும் போது இனிமேல் இந்த திருமண வாழ்க்கையைத் தொடர முடியாது எனத் தோன்றினால் அதுகுறித்து கணவனிடம் பேசிவிட்டு பின்னர் விவாகரத்து பெற்றுக் கொள்வேன் என கேசி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்