'கொத்து கொத்தாக மடியும் மக்கள்'... ‘இது சாதராண காய்ச்சல் இல்ல’... ‘நம் மீதான தாக்குதல்’... நீங்களே பொறுத்திருந்து பாருங்க’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மோசமடைந்து, 47 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாகவும், சோகத்துடனும் கூறியுள்ளார்.

'கொத்து கொத்தாக மடியும் மக்கள்'... ‘இது சாதராண காய்ச்சல் இல்ல’... ‘நம் மீதான தாக்குதல்’... நீங்களே பொறுத்திருந்து பாருங்க’!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘இது சாதாரண ஃப்ளூ காய்ச்சல் அல்ல, நம் நாட்டின் மீதான தாக்குதலாகும் இது. 1917-க்குப் பிறகு யாரும் இப்படியொன்றைக் கண்டதே இல்லை’ என்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடன் அதிகரித்துவருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், நாம் வேறு என்ன செய்வது, வேறு வழி இருக்கிறதா என்ன?.

இருந்தால் சொல்லுங்கள். நான் அனைத்தையும் பற்றி கவலைப்படுபவன். இப்போது இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். உலக வரலாற்றில் நம் பொருளாதாரம் மிகப்பெரியதாகும். சீனாவைவிடவும் பெரிது, ஏன் உலகில் அனைத்தையும் விடப்பெரியது. கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது, ஆனால் திடீரென அவர்கள் வருகிறார்கள், அனைத்தையும் மூட வேண்டும் என்கிறார்கள். இப்போது நாம் மீண்டும் திறக்கப்போகிறோம். அதற்கு நாம் இன்னும் கூடுதல் வலுவை நோக்கிச் செல்வோம்.

ஆனால் மீண்டும் திறப்பதற்கு முன்னால் வலிமையுடன் வருவதற்காகத்தான் இந்த ட்ரில்லியன் டாலர்கள் நிதி நிவாரண அறிவிப்பு. வளமும் செல்வமும் மீண்டும் மீட்டமைக்கப்படும் வரை எனக்கு ஓய்வில்லை. முன்பு இல்லாததை விடவும் பொருளாதார ரீதியாக எழுச்சி பெறுவோம். நிறைய பேர் இதற்கு சவால் அளிக்கின்றனர். பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாப் பகுதிகளும் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.