அய்யோ... என்னங்க சொல்றீங்க..! அடுத்த ‘கொடூர’ திட்டத்தை தீட்டிய ஐஎஸ்ஐஎஸ்.. அமெரிக்க ஜெனரல் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அமெரிக்கா அடுத்த பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க படை வீரர்கள் உட்பட 90 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்களால் ஆப்கான் கைப்பற்றப்பின், அங்குள்ள மக்கள் மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதற்காக பல நாட்களாக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துள்ளனர். இந்த சூழலில் அங்கு குண்டுவெடிப்பு நடந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனே நான் திரும்பிப் பார்த்தபோது, பிளாஸ்டிக் பைகள் பறப்பது போல் மனித உடல்கள் மேலே பறந்தன. இதைப் பார்த்ததும் அதிர்ந்துபோய்விட்டேன்’ என கூறியுள்ளார்.
மற்றொரு நபர் கூறுகையில், ‘காபூல் விமான நிலையத்தைச் சுற்றிலும் ஒரு தண்ணீர் கால்வாய் உள்ளது. அதுதான் அங்கிருந்த மக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்தது. ஆனால் அந்த கால்வாய் முழுவதும் மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. மீன் பிடிப்பதுபோல் சடலங்களை மீட்ட காட்சி என் மனதை உலுக்கிவிட்டது’ என கண்கலங்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அமெரிக்க மத்திய கமாண்டோ படையின் தலைவர் ஜெனரல் ஃபிரான்க் மெக்கென்ஸி, ‘காபூல் விமான நிலையத்தில் மறுபடியும் ஒரு தாக்குதல் நடைபெறலாம். ராக்கெட் லாஞ்சர்கள் அல்லது கார்களில் வெடிகுண்டை நிரப்பி தாக்குதல் நடத்தப்படலாம். அதனால் நாங்கள் எதையும் எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்’ என எச்சரிக்கை செய்துள்ளார்.
மேலும், அதிபர் ஜோ பைடன் பென்டகனுக்கு பிறப்பித்த உத்தரவில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தாக்க தகுந்த திட்டம் வகுக்குமாறு கூறியுள்ளதாக ஜெனரல் ஃபிரான்க் மெக்கென்ஸி கூறியுள்ளார். ஏற்கனவே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க எச்சரித்துள்ளது அங்குள்ள மக்களை பீதியடைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்