'எங்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு'... 'ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் உன் பகிர்ந்த 'பகீர்' தகவல்!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் ரகசியம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க செய்தியாளர் ஒருவர் தன் புத்தகத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்து கொண்டதாக சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க செய்தியாளரான பாப் வுட்வேர்ட் என்பவர் எழுதியுள்ள ரேஜ் என்ற புத்தகத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்து கொண்டதாக சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தன்னிடம் எல்லாவற்றையும் கூறுவார் எனவும், தன் மாமாவை எவ்வாறு கொலை செய்தார் என்ற விஷயத்தை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனக்கு ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்தபோது கிடைத்ததாகவும் பாப் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரம்ப், "கிம் ஜாங் உன்னை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிஐஏவுக்கு எந்த ஐடியாவும் இல்லை. கிம் ஜாங்கை நான் சந்தித்தேன். பெரிய அளவில் டீல் முடிந்து இருக்கிறது. இரண்டு நாள் சந்திப்பில் நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை'' எனக் கூறி இருந்ததாக பாப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன் புத்தகத்தில், நமது சந்திப்பு வரலாற்று திரைப்படத்தின் காட்சியை நினைவூட்டுகிறது. மீண்டும் ட்ரம்ப்பை சந்திக்க விரும்புகிறேன் என கிம் தெரிவித்து இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் ட்ரம்ப்புக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், ''உங்களைப் போன்ற மேன்மை பொருந்திய சக்தி வாய்ந்த நாட்டுத் தலைவர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அழகான இடத்தில் உங்களது கரத்தைப் பிடித்தது வரலாற்றில் ஒரு தருணம், உலகம் முழுவதும் இதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். அந்த நாளின் கவுரவத்தை மீண்டும் பெறுவேன் என்று நம்புகிறேன்'' என கிம் தெரிவித்திருந்ததாகவும் ட்ரம்ப் கூறியதாவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்