"10 வருஷமா Tax கட்டல, ஆனா... டிரம்ப் 'இதுக்கு' பண்ண செலவு மட்டும்... தெரிஞ்சா ஷாக் கன்பார்ம்!!!"... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரிப்போர்ட்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்ற தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் சிகை அலங்காரத்திற்கு மட்டும் செலவிட்ட தொகை தெரிய வந்துள்ளது.
கோடீஸ்வரரான டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் தொடர்ந்து 15 ஆண்டுகளில் அரசுக்கு வரி ஏதும் சரியாக செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 5 ஆண்டுகளில் அவர் மிகக் குறைவான வரியே செலுத்தியுள்ளார் எனவும், அதிலும் 2017ஆம் ஆண்டு வருமான வரியாக வெறும் 750 டாலர் மட்டுமே செலுத்தியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தொலைக்காட்சிகளில் தோன்ற தன்னுடைய சிகை அலங்காரத்திற்காக (Hair Style) மட்டும் ஓராண்டில் 7,00,000 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்புள்ள சுமார் 52 லட்சம்) செலவிட்டதாக அரசுக்கு தரவுகளாக சமர்ப்பித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், டிரம்ப் தொடர்பான இந்த அதிர்ச்சி தகவல்கள் அவருடைய வெற்றி வாய்ப்பை பாதிக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் இருந்து கடன்பெற்றிருந்த தொகையில் சுமார் 421 மில்லியன் டாலர் தொகையை அடுத்த 4 ஆண்டுகளில் அவர் திருப்பி செலுத்தவேண்டி உள்ளது எனவும், அதிபர் டிரம்பின் கடனில் பெரும்பாலானவை புளோரிடாவில் உள்ள அவருடைய கோல்ஃப் ரிசார்ட் (125 மில்லியன் டாலர்) மற்றும் வாஷிங்டனில் உள்ள அவருடைய ஹோட்டல் (160 மில்லியன் டாலர்) ஆகியவற்றிலிருந்து வந்தவை எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்