"நம்ம போர் விமானங்கள்ல சீனா கொடிய கட்டுங்க.. ரஷ்யா மேல குண்டு போடுங்க".. டொனால்டு ட்ரம்ப் சொன்ன விபரீத யோசனை..!
முகப்பு > செய்திகள் > உலகம்நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதை எதிர்த்து வந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ஆறு பக்கங்களில் இருந்தும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா. இதனால் கடுமையான இழப்பை உக்ரைன் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து நேற்று குடியரசு கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
சொக்கத் தங்கம்... இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்..!
அப்போது, அமெரிக்க போர் விமானங்களில் சீனாவின் கொடியை பறக்கவிட்டு, பின்னர் ரஷ்யாவின் மீது குண்டுகளை வீசலாம் என அவர் ஆலோசனை கூறி இருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் போர்
உக்ரைனின் முக்கிய நகங்களை குறிவைத்து ரஷ்யாவின் துருப்புகள் முன்னேறி வருகின்றன. மோசமான ஆயுதமான வேக்கம் குண்டுகளை மக்கள் அடர்த்தி அதிகம் இருக்கும் இடங்களில் ரஷ்யா வீசுவதாக உக்ரைன் பகிரங்கமாக குற்றம் சாட்டிவருகிறது. உக்ரைனின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.
பொருளாதார தடை
இந்நிலையில், அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் புதினின் இந்த போர் குறித்த அறிவிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
ட்ரம்ப் ஆலோசனை
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடியரசுக் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று வாஷிங்டனில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது உணர்ச்சிவசமாக பேசிய ட்ரம்ப் தற்போதைய அதிபர் பைடனை கடுமையாக சாடினார்.
இதுகுறித்துப் பேசிய டொனால்டு ட்ரம்ப்," ரஷ்யா மீது எந்தக் காரணத்தைக் கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் ஜோ பைடன் கூறி வருகிறார். இப்படி பேசுவதை முதலில் அவர் நிறுத்த வேண்டும். மனிதநேயத்துக்கு எதிராக ரஷ்யா செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது. நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ஒரே வழிதான் இருக்கிறது. அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். நாம் விலகி நின்று அதனை வேடிக்கை பார்க்கலாம்" எனக் கூறி இருக்கிறார்.
ஆரம்பத்தில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவை பாராட்டி பேசிவந்த ட்ரம்ப், தற்போது, உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
100-வது டெஸ்ட்டுக்கு அப்பறம் விராட் கோலி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ..
மற்ற செய்திகள்