'தப்பா போய்டுவாங்க'... '21 வயசுக்கு கீழே செல்போன் பயன்படுத்த கூடாது'... தடை கோரும் மசோதா!
முகப்பு > செய்திகள் > உலகம்21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது அமெரிக்காவில் சாத்தியமா என, நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ், அமெரிக்க செனட் சபையில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மசோதாவில் முக்கியமான குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகள் என்னவென்றால், ''செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது. எனவே செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும்'' என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் மசோதாவின் முக்கிய அம்சமாக ''இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும், ரூ.72 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா நிச்சயம் நிறைவேற வாய்ப்பே இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் மசோதாவை தாக்கல் செய்த செனட் உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸும், ஒரு விழிப்புணர்வுக்காகவே தாக்கல் செய்தேன் என கூறியுள்ளார்.