'சீன' நிறுவனங்களுக்கு 'செக் வைக்கும்' மசோதா... அமெரிக்க 'செனட் சபையில்' நிறைவேறியது... 'சீனாவுக்கு' எதிரான 'வேலைகளைத்' தொடங்கியது 'அமெரிக்கா...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அலிபாபா, பைடு உள்ளிட்ட சீன நிறுவனங்களை நீக்குவதற்கான மசோதாவை, அமெரிக்க செனட்சபை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது.

'சீன' நிறுவனங்களுக்கு 'செக் வைக்கும்' மசோதா... அமெரிக்க 'செனட் சபையில்' நிறைவேறியது... 'சீனாவுக்கு' எதிரான 'வேலைகளைத்' தொடங்கியது 'அமெரிக்கா...'

அமெரிக்க சட்டங்களை பின்பற்றாத சீன நிறுவனங்களை அமெரிக்க பங்கு சந்தைகளிலிருந்து நீங்குவதற்கான இந்த மசோதாவின்படி, அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் அந்நிய அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சீனாவைச் சேர்ந்த பெரு நிறுவனமான அலிபாபாவின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவைச் சந்தித்துள்ளன.

அண்மையில் லக்கின் காஃபி என்ற சீன நிறுவனம், 310 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பொய்க் கணக்கு காட்டியதால், நாஸ்டாக் பங்குசந்தையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அமெரிக்காவின் இந்த புதிய சட்டம் சீன கம்யூனிஸ்ட் கட்சியினி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தைகளை ஏமாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.