‘நீங்க பேசினா மட்டும் போதும்..’ பீட்சா உணவகத்தின் அசத்தல் ஆஃபர்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உணவகத்தில் செல்ஃபோன் பயன்படுத்தாமல் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டால் பீட்சா இலவசமாக வழங்கப்படும் என ரெஸ்டாரண்ட் ஒன்று அறிவித்துள்ளது.

‘நீங்க பேசினா மட்டும் போதும்..’ பீட்சா உணவகத்தின் அசத்தல் ஆஃபர்..

நம்மில் பலரும் சாப்பிடும்போது கூட செல்ஃபோன் பயன்படுத்துபவர்களே. செல்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்க கவுன்சிலிங் தேவைப்படும் நிலைக்குத்தான் நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். தேவை எதுவுமே இல்லை என்றாலும் செல்ஃபோனை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும், அதிலேயே அதிக நேரம் செலவளிப்பதும் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒரு பீட்சா உணவகம் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருக்கும் இந்த உணவகம் செல்ஃபோன் உபயோகிக்காமல் சாப்பிடுபவர்களுக்கு பீட்சா ஒன்றை இலவசமாக வழங்குகிறது. குறைந்தது நான்கு பேர் உணவகத்திற்கு வரும்போது, அங்கிருக்கும் லாக்கரில் அவர்களுடைய செல்ஃபோனை வைத்துவிட வேண்டும். சாப்பிட்டு முடிக்கும்வரை செல்ஃபோனைத் தொடக்கூடாது. இப்படி இருப்பவர்களுக்கு வீட்டுக்குச் செல்லும்போதோ அல்லது அடுத்த முறையோ பீட்சா ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

இதுபற்றி உணவக தரப்பில், “குடும்பத்தினர்கள், நண்பர்கள் எங்கள் உணவகத்திற்கு வரும்போது செல்ஃபோனைப் பயன்படுத்தாமல் தங்களுக்குள் பேசிக்கொள்ள வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். நாங்கள் மாதந்தோறும் வீடில்லாமல் சாலையில் இருப்பவர்களுக்கு பீட்சாவைக் கொடுத்து உதவி வருகிறோம். உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் பீட்சாவை நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு கொடுத்தும் உதவலாம்” எனக் கூறுகின்றனர்.

FREE, PIZZA