“சைலண்ட்டாக இருந்து மீண்டும் தலைதூக்கும் கொரோனா!”.. நொடிக்கு ஒரு பாதிப்பு பதிவாவதால், சமாளிக்க முடியாமல் ‘திணறிவரும்’ முக்கிய நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்US-ல் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் கிட்டத்தட்ட 1,00,000 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்த வார ஜனாதிபதித் தேர்தல் நிகழவிருக்கும் நிலையில் இந்த பாதிப்பு பெரும் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வொரு நொடிக்கும் ஒரு கொரோனா பாதிப்பாவது பதிவாவதால், நாடு முழுவதும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 9 மில்லியனைத் தாண்டியது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை ஆறு வாரங்கள் அத்தியாவசிய வணிகங்களை மூடுவதாகவும், சமூக தொடர்புகளுக்கு கடுமையான வரம்புகள் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட்டாலும் அதை விநியோகிக்க போதுமான பணம் இருக்குமா என்பது சிரமம்தான் என்று கூறப்படுகிறது. தவிர, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்குவதற்கு முன்னர், செப்டம்பர் மாதத்தில் பொருளாதாரத்தின் முதன்மை இயந்திரமான வீட்டுச் செலவு அதிகரித்தது, புதிய பொருளாதார தரவுகள் காட்டுவதாகவும் தெரிகிறது.
மற்ற செய்திகள்