'திடீர் கட்டுப்பாடுகளால் H-1B விசா விவகாரத்தில்'... 'பெரும் சிக்கலில் இந்தியர்கள்!!!'... ' IT நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் குறுகிய காலத்திற்கு வெளிநாட்டினர் தங்கியிருந்து பணியாற்ற வழங்கப்படும் ஹெச் -1பி விசாக்களை வழங்க வேண்டாம் என அந்த நாட்டு வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதால் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை தக்கவைக்க ட்ரம்ப் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஹெச் -1.பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் பற்றி வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறப்புத் தொழில்களுக்கான தற்காலிக வணிக விசாவை வழங்க வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளதும் அதில் ஒரு அம்சமாகும்.
அமெரிக்கா சென்று தங்கி தங்கள் வேலைகளை முடிக்க குறுகிய காலத்திற்கு தொழில்நுட்ப வல்லுநர்களை கணிசமான இந்திய நிறுவனங்கள் ஹெச்1-பி விசாக்களில் அனுப்பி வைக்கின்றன. இந்த புதிய விசா கட்டுப்பாடால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வேலை வாய்ப்பு பிரச்சினை பெரிதாக உருவாகியுள்ளது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் ஹெச்1-பி விசாக்கள் பெறாமல் பி-1 விசாக்களை பெற்று தங்கள் ஊழியர்களை வைத்து பணி செய்கின்றன. முன்னதாக 500 இன்போசிஸ் ஊழியர்கள் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்ட பி-1 விசாக்கள் மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு எதிராக 800,000 டாலர் நஷ்ட ஈடு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடி நிறுவனங்கள் என இல்லாமல் டாக்டர்களும் ஹெச்1-பி விசாக்களில் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுகிறார்கள். ஆனால் ட்ரம்ப் நிர்வாகம், இந்த விசாக்களில் தங்கியுள்ளோருக்கு 40 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து ஊழியர்களை அழைத்து வந்து அமெரிக்காவில் தங்க வைத்து பணியாற்ற வைப்பதில் நிறுவனங்களுக்கு லாபம் குறைந்துவிடும் என்பதால் அமெரிக்கர்களையே அந்த பணிக்கு நியமிப்பார்கள். இதனால் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாகி இந்தியர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் சூழலே ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்