'நீங்க பண்ண தப்புனால உலகமே கஷ்டப்படுது!'... கொந்தளித்த ட்ரம்ப்!... நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்துவருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
அது குறித்து பேசிய அவர், "கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்கள் சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தால் வைரஸ் பரவிய பகுதியிலேயே (வுகான் நகரம்) கட்டுப்படுத்தி இருக்கலாம். கொரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் தற்போது உலகமே அதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது.
கொரோனா குறித்த தொடக்க நிலை அறிக்கைகளை சீனா மறைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும், தற்போது அவர்கள் (சீனா) வெளியிடும் விவரங்கள் உண்மையாக இருக்கும் என நம்புவோம்.
இந்த வைரஸ் குறித்து மக்களுக்கு தெரியவந்திருந்தால் முன்னதாகவே தடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு வைரஸ் தொடர்பான தகவல் கிடைத்திருந்தால் சீனாவின் எந்தப் பகுதியில் வந்ததோ அங்கேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் தற்போது இந்த கொடிய வைரசால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான நிலையாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.