‘தடுப்பூசி போட்டுக்கிட்டா பரிசு தொகை’.. அதிபர் ஜோ பைடன் அசத்தல் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசு தொகை வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவில்தான் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதுவரை அங்கு 3 கோடியே 49 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 6 லட்சத்து 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வரவேண்டும் என்பதற்காக பல சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது.
சமீபத்தில் நியூயார்க்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்கப்படும் என்று மாநகர மேயர் அறிவித்திருந்தார். இதனை அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன், ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இருக்கிறோம். புதிய சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார். சில மாதங்களாக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்