'ஓஹோ... கதை அப்படி போகுதா?'.. 'பெரிய சதி திட்டம் தீட்டி... என்னை தோற்கடிச்சுட்டாங்க!'.. திடீரென வெளியான தகவல்!.. டிரம்ப் கருத்தால்... அமெரிக்காவில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பால் நான் வெற்றிபெறுவதை விரும்பவில்லை என டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

'ஓஹோ... கதை அப்படி போகுதா?'.. 'பெரிய சதி திட்டம் தீட்டி... என்னை தோற்கடிச்சுட்டாங்க!'.. திடீரென வெளியான தகவல்!.. டிரம்ப் கருத்தால்... அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்க நிறுவனமான பைசர், தனது கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் வாய்ந்தது என்று அறிவித்துள்ள செய்தி வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து அதிரடியாக புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, வேண்டுமென்றே கொரோனா தடுப்பூசி தொடர்பான வேலைகளை தாமதம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் டிரம்ப்.

us presential election trump accuses pfizer withholding covid vaccine

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவரே டிரம்பால் பதவியிலமர்த்தப்பட்டவர்தான், என்றாலும், அந்த அமைப்பு தனது பிரச்சாரத்தைக் குலைக்க திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும், ஜனநாயக கட்சியினரும், தேர்தலுக்கு முன் தடுப்பூசி தயாராகி, அதனால் நான் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்று கூறியுள்ள டிரம்ப், நான் முன்பு பல முறை சொன்னது போலவே, தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் கொரோனா தடுப்பூசி தயாரானது குறித்த செய்தி வெளியாகியுள்ளது என்கிறார்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, அரசியல் நோக்கங்களை கருதாமல், உயிர்கள் பலவற்றைக் காப்பாற்றுவதற்காகவாவது முன்னரே கொரோனா தடுப்பூசி தயாரான விஷயத்தை அறிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டிரம்ப்.

us presential election trump accuses pfizer withholding covid vaccine

எல்லாவற்றிற்கும் மேல், இப்படி தடுப்பூசி குறித்த தகவலை முன்கூட்டியே வெளியிடாமல் ஒத்தி வைத்ததால், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, பல உயிர்களின் இழப்புக்கு காரணமாகியுள்ளது என டிரம்ப் கொந்தளித்துள்ளார்.

ஆனால், பைசர் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா தடுப்பூசி  வெளிவந்த நேரத்திற்கு அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார்.

 

மற்ற செய்திகள்