'கடந்த' ஒரு வாரத்துல மட்டும்... 'அமெரிக்கா'வை உலுக்கும் 'பகீர்' ரிப்போர்ட்!!!... "அடுத்தடுத்த நாளுல என்ன ஆகப் போகுதோ??"..
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஓராண்டாக கொடிய தொற்றான கொரோனா வைரஸ் மூலம் அனைத்து உலக நாடுகளையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, உலகிலேயே கொரோனா வைரஸ் மூலம் அதிக பாதிப்பை அடைந்த நாடு அமெரிக்கா தான்.
இதுவரை கொரோனா தொற்று மூலம் அமெரிக்காவில் சுமார் 1.80 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த ஒரு வாரத்தில் 33 நொடிக்கு ஒருவர் கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஏழு நாட்களில் அமெரிக்காவில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட 18,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் உயிர்பலி எண்ணிக்கை 6.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
விடுமுறை தினங்களில் பொது மக்கள் அதிகம் வெளியே பயணிக்க வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியும், அதிகம் பேர் வெளியே வந்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவிற்கு மிக மோசமான வாரமாக இருந்துள்ள நிலையில், இன்னும் ஒரு சில தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பவுள்ளதால் கொரோனா பாதிப்பு இன்னும் புதிய உச்சத்தை தொடுமா என்ற அச்சம் அமெரிக்காவில் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்