'ஒருவழியா தடுப்பூசி போட்டாச்சு!!!'... 'மகிழ்ச்சியுடன் போட்டோ போட்டவருக்கு'... 'அடுத்ததாக காத்திருந்த பெரிய ஷாக்!!!'... 'நிபுணர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான மாத்யூ டிசம்பர் 18ஆம் தேதி பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதுடன், சமூக வலைதளத்தில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து தகவல் வெளியிட்டு மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து டிசம்பர் 24ஆம் தேதி மாலை அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட, 26ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற மாத்யூவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சான் டியாகோ தொற்று நோயியல் நிபுணரான டாக்டர் கிறிஸ்டியன் ராமர்ஸ், "இது ஆச்சரியம்தான். ஆனால் எதிர்பார்க்காதது எனக் கூற முடியாது. அதேநேரம் மாத்யூவுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும் என்பதால் அதுவரையிலுமே பாதுகாப்பாக இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் வழக்கம் போலவே கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்