நியூயார்க்கை 'நிலைகுலைய' வைத்துள்ள கொரோனா... 'சீனாவிலிருந்து' பரவியதல்ல... ஆய்வில் வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...
முகப்பு > செய்திகள் > உலகம்நியூயார்க் கொரோனா வைரஸ் மையமாக காரணம் சீனா அல்ல ஐரோப்பாவே என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள இகான் மருத்துவப் பள்ளி மரபணு ஸ்பெஷலிஸ்ட் ஹார்ம் வான் பேகெல், "பெரும்பாலான கொரோனா தொற்றுகள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானதே" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் தடை போட்ட அதிபர் ட்ரம்ப் ஐரோப்பியர்களுக்கு தடை போடவில்லை. மேலும் நியூயார்க்கில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மார்ச் மாத இடைப்பகுதியில் எடுக்கப்பட்டன எனவும், முன்னரே டெஸ்டுகளை துரிதப்படுத்தியிருந்தால் பிப்ரவரியில் மறைந்திருந்த கொரோனா தொற்றுகளைக் கண்டுபிடித்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜெனோம்களை ஆராய்ந்ததில் ஐரோப்பிய கொரோனா வகைமாதிரியே அமெரிக்காவில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஆசிய நாடான சீனாவிலிருந்து பரவியது அல்ல என்பதும் இதன்முலம் தெளிவாகியுள்ளது. கடந்த ஜனவரியில் சீன மற்றும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் புதிய வைரஸின் முதல் மரபணுவை வெளியிட்டதிலிருந்து உலகம் முழுதும் சுமார் 3,000 மரபணுக்களை ஆய்வாளர்கள் சீக்வன்ஸ் செய்துள்ளனர். அவற்றில் சில ஒரே மாதிரியும், மற்றவை உரு, இயல்பு மாறியும் உள்ளன.