'பரிசோதனையிலுள்ள தடுப்பூசிக்கு'... 'எமர்ஜென்சி அனுமதியைப் பெறும் முன்னணி நிறுவனம்?!!'... 'அப்போ, மருந்து சீக்கிரம் வந்துடுமா???
முகப்பு > செய்திகள் > உலகம்மாடர்னா நிறுவனம் அதன் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக 30க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பலகட்ட சோதனைகளில் உள்ளன. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை தயாரிப்பதற்கான உலகளாவிய பந்தயத்தில் முன்னணியில் இருப்பவர்களில் மாடர்னா நிறுவனமும் ஒன்றாகும். இந்நிலையில் அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனம் அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ -1273க்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை (ஈ.யு.ஏ) பெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல், "நவம்பர் 25, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு நாங்கள் அனுப்பும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரக் கோப்பில் வைக்க போதுமான பாதுகாப்புத் தரவு எங்களிடம் இருக்கும். இருப்பினும் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பிற்பகுதி அல்லது இரண்டாம் காலாண்டு வரை ஒப்புதல் எதிர்பார்க்கப்படாது. எஃப்.டி.ஏ ஒப்புக் கொண்ட வழிகாட்டுதல்களின்படி, ஆய்வில் பங்கேற்பவர்கள் குறைந்தது பாதி பேர் இறுதி ஊசி போட்டதைத் தொடர்ந்து இரண்டு மாத கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பரிசோதனையின் ஆரம்பகால முடிவுகளில் இருந்து மாடர்னாவின் தடுப்பூசி நன்கு பயனளிக்க கூடியதாக உள்ளதும், வயதானவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதும் தெரியவந்துள்ளது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், எம்.ஆர்.என்.ஏ -1273 தடுப்பூசி 55 வயதுக்கு மேற்பட்ட பழைய சோதனை பங்கேற்பாளர்களால் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதைக் காட்டுகிறது. அத்துடன் தடுப்பூசியுடன் தொடர்புடைய பாதகமான நிகழ்வுகள் முக்கியமாக லேசானவை அல்லது மிதமானவை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாடர்னா இதுவரை 30,000 பங்கேற்பாளர்களில் 15,000 பேருக்கு தனது தடுப்பூசியை வழங்கியுள்ளதும் மற்றும் அதன் மருத்துவ பரிசோதனை பாதியிலேயே உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்