ஊழியருக்கு ‘பிறந்தநாள்’ கொண்டாடிய நிறுவனம்.. கடைசியில் ‘செம’ ட்விஸ்ட்.. ஆனா இப்படி ஆகும்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிறந்தநாள் பார்ட்டி கொடுத்து தன்னை பீதிக்கு ஆளாக்கியதாக முதலாளி மீது ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்து ரூ.3.4 கோடி இழப்பீடாக பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் கெண்டக்கி (Kentucky) மாகாணத்தைச் சேர்ந்தவர் கெவின் பெர்லிங் (Kevin Berling). இவர் கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸில் ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்தார். அப்போது அலுவலகத்தில் கொண்டாடப்படும் பிறந்தநாள் விழாக்கள் கெவினுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மேலாளரிடம் தனது பிறந்தநாளை இதுபோல் கொண்டாட வேண்டாம் என கெவின் பெர்லிங் கூறியுள்ளார். மேலும், இந்த கொண்டாட்டங்கள் தனக்கு பயத்தை ஏற்படுத்துவதாகவும், சங்கடமான குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நிறுவனம் கெவினுக்கு ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் பார்ட்டியை நடத்தியுள்ளது. அதனால் அவர் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவரது காருக்குச் சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அவரது மேலாளருக்கு இதுதொடர்பாக மெசேஜ் அனுப்பியுள்ளார். மறுநாள் அலுவலகத்தில் சக ஊழியர்கள் கெவினை கிண்டல் செய்துள்ளனர். மேலும், அந்த நிறுவனம் கெவினை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது.
இதனை அடுத்து இது தொடர்பாக நீதிமனறத்தில் கெவின் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘தான் வேண்டாம் என்று கூறிய போதும் தேவையற்ற பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை நடத்திவிட்டு, தன்னை பணியில் இருந்து நீக்குவது எந்த வகையில் நியாயம்’ என நீதிமன்றத்தில் கெவின் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கெவினுக்கு 4,50,000 அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.4 கோடி. ஆனால் இழப்பீடு தரும் திட்டம் இல்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்