'பால் பவுடர் வச்சு இருந்ததுக்கு15 வருஷமா'?...'தண்டனையை ஒத்துக்கிட்ட இளைஞர்'...அதிரவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பால் பவுடர் வைத்திருந்ததற்காக இளைஞர் ஒருவருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பால் பவுடர் வச்சு இருந்ததுக்கு15 வருஷமா'?...'தண்டனையை ஒத்துக்கிட்ட இளைஞர்'...அதிரவைக்கும் காரணம்!

அமெரிக்காவின் ஒக்லாஹோமா பகுதியை சேர்ந்தவர் க்ரெக். 26 வயது இளைஞரான இவருக்கு தங்குவதற்கு வீடு இல்லாததால் தெருவோரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் ரோந்து வந்த காவல்துறையினர் க்ரெக்கிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கவர் முழுவதும் வெள்ளை நிறப் பவுடர் இருந்துள்ளது. அதனை கண்ட காவல்துறையினர் அது போதை பொருள் (கொக்கைன்) என க்ரெக்கை கைது செய்தனர். அவர் எவ்வளவோ மறுத்தும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து க்ரெக்கை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது தான் போதைப்பொருளை வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து இரண்டு மாத சிறை தண்டனைக்கு பிறகு மீண்டும் நீதிமன்றம் அழைத்துச் சென்றபோது, தான் போதைப் பொருள் வைத்திருந்ததாக க்ரெக் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

குற்றத்தை அவர் ஒப்பு கொண்டதால், சட்டத்திற்கு புறம்பாக பை நிறைய போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 15 வருட சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து சாட்சியங்களை தாக்கல் செய்வதற்காக, க்ரெக் வைத்திருந்த போதைப்பொருளை உறுதி செய்ய பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.  பை நிறைய க்ரெக் வைத்திருந்தது, போதை பொருள் அல்ல, பால் பவுடர் என தெரியவந்தது.

இதனிடையே க்ரெக் பால் பவுடர் வைத்திருந்தும் ஏன் போதை பொருள் வைத்திருந்ததாக ஒத்து கொண்டார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்கு பதிலளித்த அவர், ''ஒக்லாஹோமா சிறையில் குற்றத்தை விசாரிக்கும் முறைக்கு பயந்து ஒத்து கொண்டதாக கூறியுள்ளார். அந்த வேதனையை அனுபவிப்பதற்கு பதிலாக 15 வருடங்கள் சிறையில் இருந்து விடலாம். ஆனால் நல்ல வேளையாக பரிசோதனையால் தன் வாழ்க்கை மீட்கப்பட்டுள்ளதாக க்ரெக் கூறியுள்ளார்.

POLICE, DRUGS, COCAINE, MILK POWDER, SENTENCED, OKLAHOMA