எனக்கு வேற வழி தெரியல சார்..Office ஐ வீடாக பயன்படுத்தும் ஊழியர்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஊதியம் போதவில்லை என அலுவலகத்திலேயே பணியாளர் ஒருவர் வசிக்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

எனக்கு வேற வழி தெரியல சார்..Office ஐ வீடாக பயன்படுத்தும் ஊழியர்.. வைரல் வீடியோ..!

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட இயக்குனருக்கு மிக உயரிய பாதுகாப்பு.. வெளிவந்த புதிய தகவல்..!

கொரோனா

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து வீட்டில் இருந்தே பணிபுரியும்படி பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு உத்தரவிட்டன. இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரும்பான்மையான நிறுவங்கள் இன்னும் 'வொர்க் ஃப்ரம் ஹோம் ' மோடில் தான் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வீட்டு வாடகையும் கொடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கும் சென்றுவர முடியவில்லை எனக்கூறி அலுவலகத்தில் குடியேறி இருக்கிறார் அமெரிக்கர் ஒருவர்

US Man Lived In Office Cubicle To Protest Low Salary

வீடான அலுவலகம்

அமெரிக்காவில் வசித்துவரும் சைமன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வீடியோ ஒன்றினை பகிர்ந்தார். அந்த வீடியோவில்,"நான் என்னுடைய அலுவகத்திலேயே தங்கப் போகிறேன். இதனால் என்னுடைய உடமைகளை எடுத்து வந்திருக்கிறேன். என்னுடைய அப்பார்ட்மெண்டை என்னுடைய அலுவலகத்திற்கு மாற்றியுள்ளேன். ஏனென்றால் நிறுவனம் எனக்கு இரண்டிற்கும் போதிய அளவு பணம் கொடுப்பதில்லை. போராட்டம் செய்யும் விதமாக இந்த செயலில் இறங்கி உள்ளேன். என்னால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று பார்ப்போம்" என சைமன் குறிப்பிட்டுள்ளார்.

US Man Lived In Office Cubicle To Protest Low Salary

மனுஷன் ஏதோ விளையாடுகிறார் போல, என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், உண்மையாகவே சைமன் தனது அலுவலகத்தில் வசிக்க துவங்கியுள்ளார். டேபிளின் அடியில் தூங்கிக்கொள்ளும் சைமன், அலுவலக ஃபிரிட்ஜில் தான் எடுத்துவந்திருந்த உணவுகளை அடுக்கியிருக்கிறார். தேவைப்படும்போது அவற்றை உண்ணும் இவர், அலுவலகத்தின் அடுத்த கட்டிடத்திற்கு சென்று குளிக்கிறார்.

வைரல் வீடியோ

இப்படி தான் செய்யும் புது வித போராட்டத்தை சைமன் இன்ஸ்டாகிராமில் வெளியிட, நெட்டிசன்கள் மத்தியில் அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. 'பலரும் இப்படியான சூழ்நிலையில் தான் உள்ளனர்' என்றும் 'பெட்ரோல் விலையும் அதிகரிக்கிறது, ஆகவே இதுதான் பெஸ்ட் வழி' என்றும் கமெண்ட்களை அள்ளி வீசினர் சமூக வலைதள வாசிகள்.

ஆனால், வீடியோ வெளியிட்ட சில நாட்களிலேயே சைமனை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி இருக்கிறது அவருடைய நிறுவனம்.

 

பிரம்மாண்ட தேரை கீழே தள்ளிவிட்டு தாங்கிப் பிடிக்கும் கிராம மக்கள்.. 100 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..!

 

US, MAN, OFFICE, PROTEST, LOW SALARY, OFFICE CUBICLE

மற்ற செய்திகள்