COBRA M Logo Top

வல்லவனுக்கு பரங்கிக்காயும் படகாகும்... 60 வயசுல கின்னஸ் சாதனை.. பரங்கிக்காய் எடையை செக் பண்ணப்போ எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஒருவர் பரங்கிக்காயை படகாக பயன்படுத்தி புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வல்லவனுக்கு பரங்கிக்காயும் படகாகும்... 60 வயசுல கின்னஸ் சாதனை.. பரங்கிக்காய் எடையை செக் பண்ணப்போ எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க..!

Also Read | "இதுக்கு ஒரு Solution சொல்லுங்கப்பா".. ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த ஆங்கில வார்த்தை.. ஓஹோ இவ்வளவு அர்த்தம் இருக்கா இதுக்கு..!

பரங்கிக்காய்

அமெரிக்காவின் சிராகஸ் நகரத்தை சேர்ந்தவர் டுவான் ஹேன்சன். 60 வயதான இவருக்கு சிறுவயதில் இருந்தே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. தனது இடத்தில் பரங்கிக்காய்களை வளர்ந்துவந்த ஹேன்சன், அதையே படகாக பயன்படுத்தினால் என்ன? என நினைத்திருக்கிறார். அதை நோக்கிய முயற்சியில் இறங்கிய அவர் சில தினங்களுக்கு முன்னர் சாதனை பயணத்தை துவங்கியிருக்கிறார். இதற்காக அவர் 383 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பரங்கிக்காயை பயன்படுத்தியிருக்கிறார்.

US man floats 61 km Missouri River in giant 383 kg pumpkin

அதன் உள்ளே இருந்தவற்றை எடுத்துவிட்டு, அமரும் வகையில் சிறிய சேரை உள்ளே பொருத்தியிருக்கிறார் ஹேன்சன். இந்த பரங்கிக்காய்க்கு SS Berta எனவும் பெயரிட்டிருக்கிறார் அவர். இந்நிலையில், அமெரிக்காவின் மிசோரி நதியில் தனது பரங்கிக்காய் படகில் பயணிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி சுமார் 61 கிலோமீட்டர் நீந்தி பத்திரமாக கரையேறியிருக்கிறார் ஹேன்சன். இதற்காக அவர் 11 மணிநேரம் செலவிட்டிருக்கிறார்.

சாதனை

முன்னதாக 2016 ஆம் ஆண்டு ரிக் ஸ்வென்சன் என்பவர் வடக்கு டகோட்டாவில் உள்ள கிராண்ட் ஃபோர்க்ஸில் இருந்து மின்னசோட்டாவில் உள்ள ஒஸ்லோ வரையிலான 25-மைல் (40-கிமீ) தூரத்தை கடந்ததே இதுவரையில் சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஹேன்சன். பயணத்தின் நடுவே பரங்கிக்காய் உள்ளே நீர் உட்புக ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் சமாளித்து நெப்ராஸ்கா வரையில் தனது படகை செலுத்தியிருக்கிறார் அவர்.

US man floats 61 km Missouri River in giant 383 kg pumpkin

புகழ்பெற்ற சிண்ட்ரெல்லா கதையில், அவர் தனது இளவரசனை  சந்திக்க பரங்கிக்காயை படகாக பயன்படுத்தும் பகுதி வரும். இதையே சீரியஸாக எடுத்துக்கொண்டு அதில் சாதனையும் படைத்துவருகிறார்கள் ஹேன்சன் போன்ற விடாமுயற்சிக்கு சொந்தக்காரர்கள். இந்நிலையில், பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சாட்சிகள் ஆகியவற்றை கின்னஸ் நிர்வாகத்திடம் சமர்பித்திருக்கிறார் ஹேன்சன். இன்னும் சில நாட்களில் கின்னஸ் அமைப்பு ஹேன்சனுக்கு சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | போர்ச்சுக்கலில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. உடனடியா அந்நாட்டு சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.. முழுவிபரம்..!

US MAN, MISSOURI RIVER, PUMPKIN, GIANT PUMPKIN

மற்ற செய்திகள்