அக்கவுண்ட்டில் ஏறிய பல கோடி பணம்.. "கொஞ்ச நேரத்துக்கு உலக பணக்காரராவே மாறிட்டாராம்".. கடைசியில் நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திடீரென நமது வங்கி கணக்கில், நாம் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு தொகை செலுத்தப்பட்டுவது போல ஒரு மெசேஜ் வந்தால் எப்படி இருக்கும். நிச்சயம் அப்படியே ஒரு இன்ப அதிர்ச்சியில் தான் உறைந்து போவோம்.

அக்கவுண்ட்டில் ஏறிய பல கோடி பணம்.. "கொஞ்ச நேரத்துக்கு உலக பணக்காரராவே மாறிட்டாராம்".. கடைசியில் நடந்தது என்ன??

Also Read | "அவரு இறந்துட்டாரு".. உடல் உறுப்புகளை அகற்ற தயாரான மருத்துவர்கள்.. வேகமாக வந்த மனைவி சொன்ன பரபரப்பு விஷயம்!!

அந்த வகையில், Louisiana என்னும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வங்கி கணக்கில் வந்த பணமும் அதன் பின்னர் நடந்த சம்பவமும் கடும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

லூசியானா என்னும் பகுதியை சேர்ந்தவர் டேரன் ஜேம்ஸ். இரண்டு மகன்களின் தந்தையான டேரன் வங்கி கணக்கில் தான் ஒரு வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

டேரன் வங்கி கணக்கில் சுமார் 50 பில்லியன் டாலர்கள் பணம் வந்திருப்பதாக அவருக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. இதனைக் கண்டதும் ஒரு நிமிடம் அப்படியே ஆடி போனார் டேரன். நமக்கு யாரும் இத்தனை பணம் தர வேண்டாம் என்ற போது எப்படி இவ்வளவு பணம் வங்கியில் வந்தது என்றும் அவர் குழம்பி போயுள்ளார்.

us man becomes world richest man for a few hours

இதனைத் தொடர்ந்து, வங்கி கணக்கில் இருக்கும் பணம் தொடர்பான மெசேஜ் சரியாக தான் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக தனது வங்கி கணக்கையும் அவர் சரி பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது பணம் இருந்தது உறுதியானதால் அச்சமும் அடைந்துள்ளார் டேரன். மொத்தமாக 9 இலக்க எண்கள் கொண்ட பணம், டேரனின் வங்கி கணக்கில் வந்ததால், விர்ஜின் குழுமத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவரை விட 10 மடங்கு பணக்காரராகவும் அவரை மாற்றி இருந்தது.

அது மட்டுமில்லாமல், உலகின் 25 ஆவது பணக்காரர் அளவுக்கு அவர் வங்கி கணக்கில் பணம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது வங்கி கணக்கில் வந்த பணம் தொடர்பான விவரத்தை வங்கிக்கு அழைத்தும் தெரிவித்துள்ளார் டேரன். தான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், இவ்வளவு பணம் தன்னுடையது இல்லை என்பதையும் அவர் விளக்கி உள்ளார்.

us man becomes world richest man for a few hours

முன்னதாக, லூசியானா பொதுப் பாதுகாப்புத் துறையில் சட்ட அமலாக்க அலுவலராக பணிபுரிந்த டேரனின் வங்கிக் கணக்கு, 3 நாட்களுக்கு முடக்கப்பட்டு பின்னர் பணம் திரும்ப பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தவறுதலாக 50 மில்லியன் டாலர்கள் வங்கி கணக்கில் வந்ததால், சிறிது நேரம் உலக பணக்காரர்கள் அளவுக்கு சாதாரண நபர் இடம்பிடித்த விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | வைரலாகும் திருமண பேனர்.. ஜாதக வடிவில் நண்பர்கள் புகைப்படம்.. "அதுலயும் 90 ஸ் கிட்ஸ்ங்க கடைசி'ல போட்ட லைன் இருக்கு பாருங்க"

US, WORLD RICHEST MAN, ACCOUNT, BANK ACCOUNT

மற்ற செய்திகள்