கவலை படாதீங்க...! அவங்களால 'உங்களுக்கு' ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா பார்த்திட்டு 'சும்மா' இருக்க மாட்டோம்...! - ஜோ பைடன் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்தைவான் மற்றும் சீன நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. தைவான் தங்களை தனி நாடு எனக் கூறிவருகிறது, ஆனால் சீனாவோ தைவான் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதி எனக் கூறிவருகிறது.
1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் என்ற நாடு உருவானது. அதன்பின் இன்றளவும் தைவான் தங்களை தனி நாடு என அறிவித்து வருகிறது. ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் எப்படியாவது தைவானை சீனாவோடு இணைக்க அரும்பாடுபட்டு வருகிறார்.
மேலும், 'தேவைப்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம்' என எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் 'சீனா அமைதியான முறையில் தான் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது' என்ற அன்பு முகத்தையும் காட்டியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் சீனா தைவான் விஷயம் குறித்து பேசும் போது , 'நாங்கள் தைவான் விஷயத்தில் பொறுப்புடன் இருக்கிறோம். தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தைவானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்' என உறுதிப்பட கூறியுள்ளார்.
இதற்கு முன்பு தைவான் ஜலசந்திக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்பியா போது சீனா 'அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் எங்கள் பிரந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளன' எனக் குறிப்பிட்டுருந்தார்.
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த தைவான் நாடும் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ வெளியிட்ட அறிக்கையில் சீனாவை மூக்குடைத்துள்ளது. அதில், 'சீனா கனவு காண்கிறது. தாலிபான்கள் வழியைப் பின்பற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக சீனா தைவானைச் சுற்றி தனது போர்ப் பயிற்சியை அதிகரித்துள்ளது. செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா - தைவான் இடையிலான எல்லையைக் கடந்துள்ளதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்