'வுஹான்' ஆய்வகத்தில் தான்... 'உண்மையிலேயே' கொரோனா 'உருவானதா?'... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் வெளியானதா என்பது குறித்த கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

'வுஹான்' ஆய்வகத்தில் தான்... 'உண்மையிலேயே' கொரோனா 'உருவானதா?'... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...

கொரோனா வைஸால் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். முதல்முதலாக இந்த கொரோனா வைரஸ் கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரிலுள்ள இறைச்சி சந்தை ஒன்றிலிருந்து உருவானதாகக் கூறப்படும் நிலையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் சீனாவின் வுகானில் உள்ள ஓர் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக ஃபாக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், வுகான் ஆய்வகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் இறைச்சி சந்தைக்குச் சென்றபோதே வைரஸ் பரவி அங்கிருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவியது என தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது பயோ வார் அல்ல எனவும் வைரஸ்களை கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்கு இணையாக உருவாக வேண்டும் என சீனா முயற்சிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபரிடம் வுஹான் ஆய்வகம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், "வுஹான் ஆய்வகம் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் அதைப் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டு வருகிறேன். கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் உருவானதா என என்னுடைய அரசு விசாரணை நடத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.