'பண்றதெல்லாம் பண்ணிட்டு'... 'மகனுக்கு ஃபோன் போட்ட தந்தை'... 'பேரதிர்ச்சிக்கு உள்ளான மகன்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஒருவர் தன்னுடைய தாயையும், மனைவியையும் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள டெலாவேர் கவுண்டியில் வசித்து வரும் இந்திய முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் 1983ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஷாட் புட் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத்தந்துள்ளார். இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறி தற்போது பென்சில்வேனியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு போன் செய்த இக்பால் சிங் தன்னுடைய மனைவி மற்றும் தாயை தானே கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவருடைய வீட்டிற்கு விரைந்து சென்றபோது, அவருடைய மனைவி ஜஸ்பால் கவுர் மற்றும் தாய் நசிப் கவூர் ஆகியோர் தொண்டை அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அப்போது இக்பால் சிங்கும் தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயல, அவரைக் கைது செய்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள டெலாவேர் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஜாக் ஸ்டோல்ஸ்டைமர், "இக்பால் சிங் மனைவி, தாய் இருவரையும் கொலை செய்துவிட்டு அவருடைய மகனுக்கு போன் செய்து, உன்னுடைய தாயையும், பாட்டியையும் நான் கொன்று விட்டேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்